இனி தோசைக்கு மாவு அரைக்க தேவையில்லை.. !!இந்த தோசை ட்ரை பண்ணி பாருங்க..!!

0
240
Instant Dosa

Instant Dosa: பெரும்பாலும் காலை, இரவு டிபன் அனைவருக்கும் இட்லி, தோசையாக தான் இருக்கும். அதிலும் தோசை என்றால் அலாதி பிரியம் தான். எல்லோருக்கும் தோசை என்றால் அவ்வளவு பிடிக்கும். அதிலும் பல வகையான தோசை உள்ளது. கறி தோசை, முட்டை தோசை, பொடி தோசை, மசாலா தோசை, வெங்காய தோசை என பல வகைகளில் தோசை உள்ளது.

வீட்டில் உள்ளவர்கள் இன்று சாப்பாட்டிற்கு இட்லியா? தோசையா? என்று கேட்டால் பாதி பேரின் முடிவு தோசை என்று தான் வரும். சில சமயம் டிபன் செய்வதற்கு மாவு இல்லாமல் இருக்கும். அப்போது இந்த தோசையை ட்ரை பண்ணி பாருங்க செம (instant dosa seivathu eppadi) டேஸ்டா இருக்கும்.

தேவையான பொருட்கள்

  • ரவை -1 கப்
  • அவல் – 2 டேபுள் ஸ்பூன்
  • தயிர் – 1/2 கப்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஒரு கப் ரவையை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். அதன் பிறகு ஊறவைத்த 2 ஸ்பூன் அவல் அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு 1/2 கப் தயிர், 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து, அதனை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து தற்போது தோசை மாவு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து ஒரு 5 நிமிடம் அப்படியே வைத்திருக்க வேண்டும்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து தோசை கல்லை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி தேய்த்து, எடுத்து வைத்துள்ள மாவை அதில் ஊற்றி இருபுறமும் திருப்பி போட்டு எடுத்தால் சுவையான தோசை தயார்.

இதற்கு வழக்கமாக வைக்கும் தேங்காய் சட்னி, கார சட்னி வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க: 80ஸ் 90ஸ் ஸ்பெஷல் குச்சி சிப்ஸ்.. மொறு மொறுனு 5 நிமிடத்தில் செய்யலாம்..!

Previous articleநடைபயிற்சி பயன்கள்: தினமும் 30 நிமிடங்கள் நடந்தால்.. ஹாஸ்பிடல் செலவு வராது!!
Next articleInstant Mehndi: மருதாணி, மெஹந்தி தேவையில்லை 2 நாள் ஆனாலும் அழியாது..!