என்னங்க பூஸ்ட் ஹார்லிக்ஸ்… வடித்த கஞ்சி குடிச்சிருக்கீங்களா? இதன் மருத்துவ பயன்கள் கேட்டால் ஆச்சரியப்படுவீங்க..!

0
274
Benefits of Strained Porridge

Benefits of Strained Porridge: நவீன காலத்தில் சாதத்தை வடித்து சாப்பிடும் பழக்கம் என்பது முற்றிலும் மாறிவிட்டது என்று தான் கூறவேண்டும். குக்கரில் அரிசிக்கு ஏற்ப நீர் சேர்த்து அதனை அடுப்பில் வைத்து 2, 3 விசில் வைத்து இறக்கினால் சாதம் தயாராகிவிடும். முன்பெல்லாம் காலையில் எழுந்ததும் முதல் நாள் வைத்த பழைய சாதத்தை சாப்பிட்டு வந்தோம். அது உடலை வலிமையாக வைத்துக்கொண்டிருந்தது. சாத்தை வடித்து சாப்பிட்டு வருவது உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.

இப்போதும் உடம்பு சரியில்லை என்று மருத்துவர்களிடம் சென்றால் அவர்கள் கஞ்சி வைத்து மூன்று வேலையும் சாப்பிடுங்கள் என்று கூறுவார். மேலும் உடல் நலம் குன்றிய போதும் நமக்கும் வேறு எதுவும் சாப்பிட பிடிக்காது. ஆனால் கஞ்சி இருந்தால் சாப்பிடுவோம். இந்த கஞ்சியில் அவ்வளவு நன்மைகள் உள்ளன. அதனை பற்றி இந்த பதிவில் (arisi vaditha kanchi benefits in tamil) காணலாம்.

சாதம் வடித்த கஞ்சியின் நன்மைகள்

நீண்ட நாள் மலச்சிக்கல் இருப்பவர்கள் இந்த வடித்த கஞ்சியை தினந்தோறும் காலையில் குடித்து வந்தால் உடனடியாக மலச்சிக்கல் நீங்கிவிடும்.

வடித்த கஞ்சியை ஆறவைத்து அதனுடன் சியக்காய்யை வைத்து தலையில் தேய்த்து குளித்து வர பொடுகு தொல்லை, முடி மிருதுவாக வளரும்.

கஞ்சியை ஆறவைத்து உடலில் தேய்த்துவர வியர்க்குரு, சொரியாசிஸ் நோய் சரியாகிவிடும்.

பெண்களுக்கு ஏற்படும் பாத வெடிப்பு ஏற்பட்டு அதிலிருந்து இரத்தம் வரும். அவர்கள் இந்த கஞ்சியில் சிறிதளவு மஞ்சள்தூள் போட்டு குடித்து வர இந்த பிரச்சனை நீக்கி விடும்.

சிறுநீர் பிரச்சனை உள்ளவர்கள் இந்த கஞ்சியை வெறும் வயிற்றில் காலையில் குடித்து வந்தால் சிறுநீர் தொடர்பான அனைத்து பிரச்சனையும் நீங்கிவிடும்.

தற்போது குழந்தைகளுக்கு பூஸ்ட், ஹார்லிக்ஸ் எல்லாம் கொடுத்து அவர்கள் நாள்தோறும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் இதனை எல்லாம் தவிர்த்து விட்டு காலையில் வடித்த கஞ்சியில் சிறிதளவு உப்பு போட்டு குடிக்க வைத்து பாருங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்

பசி என்றால் என்னவென்றே தெரியாத குழந்தைகள் கூட பசிக்கிறது என்று கூற வைக்கும் இந்த வடித்த கஞ்சி.

வடித்த கஞ்சியை ஆறவைத்து முகம் கழுவி வர முகத்தில் உள்ள பருக்கள் எல்லாம் மறைந்து விடும். பளபளப்பாக இருக்கும். கொரியா பெண்கள்  அவர்களின் முக பராமரிப்பிற்கு வடித்த கஞ்சி, சாதத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள்.

கஞ்சியுடன் சீரகத்தூள் சேர்த்து பருகி வந்தால் எளிதில் (boiled rice water benefits in tamil)
ஜீரணமாகிவிடும்.

மேலும் படிக்க: இனி நரைமுடிக்கு டை அடிக்காதீங்க..!! ஒரு முறை இதை ட்ரை பண்ணுங்க போதும்..!

Previous articleஒரே மாதிரி உருளைக்கிழங்கு வறுவல் செய்யாமல் இந்த மசாலா உருளைக்கிழங்கு ட்ரை பண்ணுங்க..!
Next articleமனதிற்கு பிடித்தவரை ஒரு நிமிடம் HUG செய்தால் உடலுக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்!!