Unlock 1.0 – தமிழக அரசின் முக்கிய தளர்வுகள் பட்டியல்

Photo of author

By Parthipan K

Unlock 1.0 – தமிழக அரசின் முக்கிய தளர்வுகள் பட்டியல்

Parthipan K

கொரோனா காரணமாக நடைமுறைப்பட்டுள்ள ஐந்தாம் கட்ட ஊரடங்கு Unlock 1.0 எனும் பெயரில் வரும் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஊரடங்கின் முக்கிய தளார்வுகளை தொகுத்து இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

  • சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் பொது போக்குவரத்திற்கு அனுமதி.
  • உணவகங்களில் தனிமனித இடைவெளியோடு அமர்ந்து உணவு உண்ண தமிழக அரசு அனுமதி.
  • டீ கடைகளில் அமர்ந்து டீ அருந்தவும் தமிழக அரசு அனுமதி.
  • குளிர்சாதன வசதி பயன்படுத்தாமல் முடித் திருத்தங்கள் இயங்கலாம்.
  • நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு செல்ல தடை
  • ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடர்கிறது.
  • கொரோனா பணியில் உள்ளவர்களுக்கு தடையிலிருந்து விலக்கு.
  • நாளை முதல் சென்னை காவல் எல்லை நீங்கலாக பிற மாவட்டங்களில் பொது போக்குவரத்து தொடக்கம்.
  • சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது.
  • 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும்.
  • ஒரு பேருந்தில் 60 சதவீத இருக்கைகளில் பயணிகள் அனுமதிக்கப்படுவர்.
  • மண்டலங்களுக்குள் இ-பாஸ் இல்லாமல் பயணம் செய்யலாம்.
  • பொது போக்குவரத்தில் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை.
  • பொது போக்குவரத்து அனுமதிக்காக 8 மண்டலங்களாக பிரிப்பு.
  • பொது போக்குவரத்து கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அனுமதி.