இந்த இலையை மட்டும் சாப்பிடுங்க போதும்… மூலம் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்..!

0
231
Thuthi ilai

Thuthi ilai: நாம் வாழ்கின்ற இந்த சுற்றுச்சூழலில் எவ்வளவு வகையான மூலிகைச்செடிகள் உள்ளன. ஆனால் அதை எல்லாம் நாம் ஏதோ களைச்செடிகள் என்று நினைத்து கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுகிறோம். சொல்லப்போனால் அந்த செடிகளின் பெயர் கூட நமக்கு தெரிவதில்லை. தீராத வியதிகளுக்கு பல லட்சம் செலவு செய்து அந்த நோய் சரியாகாமல் என்ன செய்வது என்றும் தெரியாமல் இறுதியாக வீட்டில் பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம். இந்த நோய்க்கு இந்த இலையை சாப்பிட்டால் உடனடியாக குணமடைந்துவிடும் என்று. ஆனால் நவீனக்காலத்தில் வாழும் நமக்கு இந்த செடியா இவ்வளவு பெரிய நோயை குணப்படுத்த போகிறது என தோன்றும்.

ஆனால் உண்மையில் இயற்கையாக உருவாகும் ஒவ்வொரு தாவரத்திற்கும் ஒரு நோயை குணப்படுத்தும் தன்மையை நமது முன்னோர்கள் அறிந்து அதனை குறித்தும் வைத்துள்ளனர். தற்போது கம்யூட்டரில் வேலை பார்பவர்கள் தான் அதிகம். மேலும் உட்கார்ந்த இடத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு ஒருசிலருக்கு நிச்சயம் இந்த மூலம் பிரச்சனை இருக்கும். அதற்கு சிறந்த மருந்தாக பயன்படும் இலையைப்பற்றி தற்போது (home remedy for piles in tamil) காணலாம்.

மூல நோய்

மூல நோய் என்பது ஆசன வாய் வெளிப்புறம் அல்லது உட்புறம் சதை வளர்ந்து காணப்படுவது. இது உள் மூலம், வெளி மூலம், பவுத்திர மூலம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது மலச்சிக்கல், மரபணு காரணமாக ஒருவருக்கு வரும்.

துத்தி இலை

ஒரு சிலர் இந்த துத்தி இலையை பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள். இந்த செடிகள் பெரும்பாலும் சாலை ஓரங்களில் அல்லது மற்ற செடிகள் வைத்திருந்தால் அதன் பக்கத்தில் வளரும். இவை களைச்செடிகள் என்று நினைத்து நாம் பறித்து எறிந்து விடுவோம்.

இதனை துத்தி இலை அல்லது துத்தி கீரை (thuthi keerai benefits) என்று கூறுவார்கள். இரத்த மூலத்திற்கு சிறந்த மருந்தாகும். இந்த இலைகளை பறித்து வந்து நீரில் போட்டு கொதிக்க வைத்து இலையின் சாறு நீரில் இறங்கியதும், அதில் 1 ஸ்பூன் தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்து வர மூலம் சரியாகிவிடும்.

மலச்சிக்கலால் உடல் உஷ்ணமாகி இந்த மூலம் ஏற்படுகிறது. இந்த துத்தி கீரை மலச்சிக்கலை நீக்குகிறது.

மேலும் இந்த கீரையில் கேலிக் அமிலம் மற்றும் டையூரிக் உள்ளதால் சிறந்த வலி நிவாரணியாக பயன்படுகிறது.

இந்த துத்தி செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டது. இந்த செடியின் வேர் நரம்புகளுக்கு வலிமை கொடுக்கிறது. இந்த வேரை கசாயம் வைத்து குடித்து வர பக்கவாதம் தடுக்கப்படுகிறது.

இந்த இலையை சிறிது ஆமணக்கு எண்ணெய்விட்டு வதக்கி அதனை ஒரு துணியில் கட்டி மூல கட்டியின் மீது ஒத்தடம் கொடுத்துவர மூலக்கட்டி விரைவில் குணமாகும்.

மேலும் இந்த இலையை பறித்து வந்து பருப்பு சேர்த்து மற்ற கீரைகள் கூட்டு செய்வது போல துத்தி கீரை கூட்டு செய்து சாப்பிட்டு வரலாம்.

இந்த துத்தி இலை கிடைக்காதவர்கள் நாட்டு மருந்துக்கடையில் துத்தி பொடி வாங்கி வந்து பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க: மது பழக்கத்தை மறக்க வேண்டுமா? மகா குடிகாரர்கள் கூட இதை குடித்தால் திருந்தி விடுவார்கள்..!!