TNPSC: தமிழக அரசுப் பணிக்கான போட்டி தேர்வுகளில் குறைந்தபட்சம் தமிழ் மொழித்தளில் 40% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் – சென்னை ஐகோர்ட் அதிரடி!!

Photo of author

By Divya

TNPSC: தமிழக அரசுப் பணிக்கான போட்டி தேர்வுகளில் குறைந்தபட்சம் தமிழ் மொழித்தளில் 40% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் – சென்னை ஐகோர்ட் அதிரடி!!

கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவையில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன பணிக்கான அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம் இடம்பெறும் என்றும் தமிழில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண் பெற வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அறிவித்தார்.இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயம் என்பது குறித்து விரிவான விளக்கம் கொடுத்தது.

குரூப்-1,குரூப்-2,குரூப்-3,குரூப்-4 மற்றும் ஆசிரியர் தேர்வாணையம்,சீருடை பணியாளர் தேர்வாணையம்,மருத்துவ பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பிற தேர்வு முகமைகள் நடத்தக் கூடிய போட்டி தேர்வுகளுக்கும் இந்த அரசாணை பொருந்தும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்திருந்தது.தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் அரசுப் பணிக்கான போட்டி தேர்வுகளில் பிற மாநிலத்தவர் தேர்ச்சி பெற முடியாத நிலை உருவாகி விடும்.

இந்நிலையில் வருகின்ற ஜூன் மாதம் குரூப் 4 போட்டி தேர்வு நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து 10 போட்டி தேர்வர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிமதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்த நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தார்.பின்னர் போட்டி தேர்வுகளுக்கான கல்வித் தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது.தமிழ் மொழித்தாளில் முழு மதிப்பெண் பெற வேண்டும் என்று அரசு வற்புறுத்தவில்லை.

குறைந்தது 40% மதிப்பெண் பெற வேண்டும் என்று தான் கூறுகிறது.போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பதவிகளை வகிப்பவர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருந்தால் மட்டுமே மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியும் என்ற அரசின் வாதத்தில் தவறு இல்லை.எனவே அரசின் இந்த கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று தெரிவித்த தமிழக அரசின் ஆணையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.