உங்களுடைய வாயில் இருந்து துர்நாற்றம் வீசுகிறாதா? அதை சரிசெய்ய எலுமிச்சை ஒன்று மட்டும் போதும்! 

Photo of author

By Sakthi

உங்களுடைய வாயில் இருந்து துர்நாற்றம் வீசுகிறாதா? அதை சரிசெய்ய எலுமிச்சை ஒன்று மட்டும் போதும்!
நம்மில் ஒரு சிலருக்கு வாயில் துர்நாற்றம் வீசும். என்னதான் விலை உயர்ந்த பேஸ்ட் மற்றும் பிரஸ் பயன்படுத்தி பற்களை நாம் சுத்தம் செய்தாலும் வாயை நாம் சுத்தம் செய்வதற்கு மறந்து விடுகின்றோம்.
இதனால் முந்தைய நாள் இரவில் சாப்பிட உணவுகள் கிருமிகளாக மாறி வாயில் தங்கி விடுகின்றது. இதனால் வாயில் துர்நாற்றம் வீசத் தொடங்குகின்றது. வாயில் துர்நாற்றம் வீசினால் நமக்கும் பிரச்சனை. நம்முடன் பேசுபவர்களுக்கும் பிரச்சனை.
இந்த வாய் துர்நாற்றத்தை சரி செய்ய நாம் எலுமிச்சம்பழத்தை பயன்படுத்தலாம். எலுமிச்சம்பழம் பாத்திரங்கள் முதல் கொண்டு சுத்தம் செய்கின்றது. இந்த எலுமிச்சம்பழம் பல நோய்க் கிருமிகளை அழிக்கின்றது. ஆதலால் நம்முடைய வாயில் உள்ள நோய்க் கிருமிகளை அழித்து வாயில் வீசும் துர்நாற்றத்தை போக்க எலுமிச்சம்பழத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து தற்பொழுது பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
துர்நாற்றத்தை போக்க எலுமிச்சையை பயன்படுத்தும் முறை:
முதலில் ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதில் எலுமிச்சை சாற்றை பிழிந்து கொள்ளவும். இறுதியாக இதை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இந்த எலுமிச்சை நீரை வைத்து நாம் வாய் கொப்பளிக்க வேண்டும். அவ்வாறு எலுமிச்சை நீரினால் வாய் கொப்பளிக்கும் பொழுது வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்து விடும். மேலும் நம்முடைய வாயில் வீசும் துர்நாற்றம் இனி இருக்காது. இதை தொடர்ந்து செய்து வரவேண்டும்.