ஞாபகச் சக்தியை அதிகரித்துக் கொள்ள வல்லாரையை இப்படி சாப்பிடுங்க!
உங்களுடைய ஞாபகச் சக்தியை அதிகரித்து நினைவாற்றலை அதிகரிக்க வல்லாரையுடன் ஒரு சில பக்கங்களை சேர்த்து சாப்பிட வேண்டும். அந்த பொருட்கள் என்னென்ன என்பது குறித்தும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் பார்க்கலாம்.
பொதுவாக ஞாபக மறதி என்பது அனைவருக்கும் இருக்கும். ஆனால் அது ஒவ்வொரு நபரின் மனநிலையை பொருத்து வேறுபடும். மாணவர்களுக்கு படித்தது மறந்து விடும். அது போல பலருக்கும் பலவிதமான விஷயங்கள் மறந்துவிடும்.
இதற்காக அதாவது ஞாபக மறதி சரியாக வேண்டும் என்பதற்கும் ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டும் என்பதற்கும் தனியாக மருந்து மாத்திரைகள் இருக்கின்றது. இந்த மருந்து மாத்திரைகளை விட வல்லாரை கீரை இதற்கு பெரிதும் பயன்படும்.
வல்லாரை கீரை பொதுவாக மூளைக்கு பலத்தை சேர்க்கும் என்று சொல்வார்கள். உண்மைதான். வல்லாரையை சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். மேலும் நினைவாற்றல் பெருகும். மேலும் இது மூளைக்கு தேவையான பலத்தையும் அளிக்கும். இதனுடன் ஒரு சில பொருட்களை சேர்த்து பயன்படுத்தினால் பலன் பல மடங்கு கிடைக்கும். அது என்னென்ன எவ்வாறு என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* வல்லாரை
* வசம்பு
* தேன்
செய்முறை:
வல்லாரை மற்றும் வசம்பை பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த வல்லாரை பொடி மற்றும் வசம்பு பொடியை சிறிய பவுலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் தேன். சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை நாம் அப்படியே சாப்பிடலாம். இதனால் ஞாபக சக்தி அதிகரிக்கும். மேலும் நினைவாற்றல் பெருகும்.