பல்வலியா அப்போ இந்த ஒரு காய் போதும்..! பல்வலி 10 நிமிடத்தில் பறந்து போய்விடும்..!

0
199
Kandankathiri Kai

Kandankathiri Kai: பல்வலி வந்தால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு வலி ஏற்படுத்தும். அதற்கு எவ்வளவோ மருத்துவம் பார்த்தாலும் இந்த பல்வலி மட்டும் குணமடையாது. பல்லை பிடிங்கினால் மட்டும் தான் இதற்கு நிரந்தர தீர்வாக உணர்வோம்.

பல்வலிக்கு முதல் காரணமாக இருப்பது என்னவென்று பார்த்தால் அது பூச்சி தான். இந்த பூச்சி பல் வந்துவிட்டால் அது நாளடைவில் வலியை ஏற்படுத்தி நம்மால் சாப்பிட முடியாது. பேச முடியாது. எனவே தான் பல்லை பிடிங்கிவிட வேண்டும் என நினைப்பார்கள். பல்வலியை குணப்படுத்த என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கண்டங்கத்தரிக்காய் மருத்துவ பயன்கள்

இந்த கண்ணடங்கத்திரி பார்பதற்கு சிறிய கத்தரிக்காய் போன்று இருக்கும். இந்த செடி முட்கள் நிறைந்து இருக்கும்.

கண்டங்கத்தரிக்காய் பழத்தை நெருப்பில் போட்டால் புகை வரும். அந்த புகையை வாயால் பிடிக்க பற்களில் உள்ள பூச்சிகள் செத்துவிடும்.

மேலும் இந்த கண்டங்கத்தரி வேரை நீர், இலை, காய், பூ என அனைத்தையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்க பூச்சி பல் வராமல் தடுக்கப்படுகிறது.

இந்த கண்டங்கத்தரிக்காய் ரசம் வைத்தோ, குழம்பு வைத்தோ சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையும். இந்த கத்தரிக்காயை கழுத்தில் உள்ள தைராய்டு போன்ற, கழுத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

மேலும் இந்த இலைகளை கசாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் தீரும்.

இந்த கண்டங்கத்திரி பொடி வாங்கி வந்து 1/2 ஸ்பூன் கொதிக்க வைத்து குடித்து வந்தால் தொடர் தும்மல், ஆஸ்துமா, குழந்தைகளுக்கு ஏற்படும் சளி பிரச்சனைகளும் கொடுக்கலாம்.

முள் கத்திரிக்காய், கண்டங்கத்திரி இரண்டும் ஒன்று போல தான் இருக்கும். இவை இரண்டையும் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க: கண் கருவளையம் பிரச்சனையா? இதை செய்யுங்க உடனே மறைந்துவிடும்..!!

Previous articleCentral Government Job: UIDAI ஆதார் நிறுவனத்தில் அசத்தல் வேலை!! மாதம் ரூ.1,12,400 ஊதியம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!
Next articleஉங்களுக்கு இந்த பழக்கங்கள் இருந்தால்.. நிச்சயம் இந்த நோய் இருக்கும்..!!