விஜயபிரபாகரன் தோற்கவில்லை.. ஆதாரம் உள்ளது!! அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு!!
நாடாளுமன்ற தர்தலானது இம்முறை பல திருப்பு முனைகளை கொடுத்துள்ளது. கடந்த இரண்டு முறையும் மத்தியில் ஆட்சி அமைத்த பாரத ஜனதா கட்சி இம்முறை தன்னுடைய தனி பெரும்பான்மையை இழக்க நேரிட்டது.மத்தியில் ஆட்சி அமைக்கவே இரு கட்சிகள் கைகொடுக்க வேண்டியுள்ளது.குறிப்பாக தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட பாஜக என்ற பெயர் இடம் பெறவில்லை.அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 20க்கும் மேற்பட்ட எம்பிகளாவது வென்றிருப்பார்கள்.அதன் வெற்றிடத்திற்கு காரணமும் பாஜக தான்.
அந்த வகையில் இம்முறை அதிமுகவுடன் தேமுதிக, புதிய தமிழகம், இந்திய சமூக ஜனநாயக கட்சி உள்ளிட்டவை கூட்டணி வைத்தது.இதனையடுத்து புதிய தமிழகம் மற்றும் இந்திய சமூக ஜனநாயக கட்சியானது இரட்டை இலை சின்னத்தின் மூலமும் தேமுதிக ஐந்து இடங்களிலும் நின்றது.குறிப்பாக விஜயபிரபாகரன் களம் கண்ட விருதுநகர் தொகுதியில் பெரும் எதிர்பார்ப்பும் நிலவியது.அதேபோல வாக்கு எண்ணிக்கையில் ஆரம்ப கட்டத்திலிருந்து விஜய பிரபாகரன் முன்னிலை வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் 4000 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூர் வெற்றி வாகை சூடினார்.இது தேமுதிகவிற்கு பெரும் ஏமாற்றத்தையே அளித்தது. மேற்கொண்டு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்று கொடுத்தார்.அதில் அவர் கூறியதாவது, அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்ததில் கிட்டத்தட்ட ஒரு கோடி வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளோம்.இதற்காக எடப்பாடி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி.
அதேபோல விஜயபிரபாகரன் 4000 வாக்கு வித்தியாசத்தில் வீழ்ச்சி அடையவில்லை திட்டமிட்டு வீழ்ச்சி அடையப்பட்டுள்ளார்.அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளது.அந்த ஆதாரங்களை வைத்து தான், தற்பொழுது நான் பேசுகிறேன். விஜய பிரபாகரன் ஒரு பொழுதும் தோல்வியடையவில்லை தோற்கடிக்கப்பட்டுள்ளார். வீழ்ச்சியடையவில்லை வீழ்த்தப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.இவர் தற்பொழுது ஆதாரம் வைத்துள்ளது என்று கூறியது அரசியல் வட்டாரத்தில் சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.