நம்மில் பலரும் ருத்ராட்சத்தை பார்த்து இருப்போம். மேலும் பலர் இதனை அணிந்து இருப்போம். முன்பெல்லாம் சாமியார்கள் தான் இந்த ருத்ராட்சத்தை அணியவேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவி வந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் ருத்ராட்சம் அணிகின்றனர். பலர் இதன் மகத்துவத்தை அறிந்திருந்தாலும் சிலருக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லை என்று தான் கூறவேண்டும். எனவே நாம் இப்பதிவில் ருத்ராட்சம் குறித்த முக்கிய தகவல்களை பார்க்கலாம்.
ருத்ராட்சம்
ருத்ராட்சம் என்பது ஒரு மரத்தில் இருந்து கிடைக்கும் விதை ஆகும். இந்த ருட்ராட்சமானது ஈல்லியோகார்பஸ் கனிற்றஸ் என்ற ஒரு மரத்தின் விதை ஆகும். இந்த வகை மரங்கள் இமாலய பகுதியகளில் உள்ள உயர்நத மலை பகுதிகளில் காணப்படுவதாக கூறபடுகிறது. இந்த வகையான மரங்கள் இந்தியாவில் மிகவும் குறைந்த அளவில் தான் காணப்படுகிறது. மேலும் இந்த மரங்கள் இந்தோனிசியா, தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுளில் காணப்படுகிறது.
இந்த ருத்ராட்சமானது பல முகங்களில் காணப்படுகிறது. இதன் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு விதமான பலனை தருகிறது. இது 1 முதல் 21 வரையிலான முகங்களுடன் கிடைக்கிறது. இதில் அதிக அளவிலான மக்களால் விரும்பப்படும் மற்றும் பலராலும் அணிய வேண்டும் என நினைப்பது ஐந்து முகம் மற்றும் ஏழு முகங்கள் கொண்டு ருத்ராட்சங்களை தான்.
இந்த ருத்ராட்சங்களை சிலர் மாலையாக கோர்த்து அணிந்துக்கொள்வர், இன்னும் சிலர் ஒரே ஒரு ருத்ராட்சத்தை கோர்த்து அணிந்துக்கொள்வர். இதனை அணிவதால் வாழ்வில் நன்மைகள் நடைபெறுவதாகவும், இறைவன் ஆசி அவர்களுடன் இருப்பதாவும் அவர்களால் நம்பப்படுகிறது.
ருத்ராட்சத்தின் முகங்கள் மற்றம் அவற்றின் பலன்கள் (Rudraksha Benefits in Tamil)
ருத்ராட்சங்கள் பொதுவாக 1 முதல் 21 வரையிலான முகங்களுடன் கிடைக்கிறது. இந்த முகங்களை நாம் வெறும் கண்களாலே பார்க்கலாம். இதனை எவ்வாறு அறிவது என்றால் நாம் ஒரு ருத்ராட்சத்தை எடுத்து உற்றுநோக்கினால் அதில் கோடுகள் தெரியும் இதை தான் நாம் முகங்கள் என்கிறோம். ஒரு ருத்ராட்சத்தில் எத்தனை கோடுகள் உள்ளதோ அத்தனை முகங்கள் இருப்பதாக அர்த்தம். மேலும் இந்த ருத்ராட்சங்கள் அனைத்தும் அதன் அளவிற்கு ஏற்ப வேறுபட்ட அதிர்வுகளை பெற்றுள்ளது.
ஒரு முக ருத்ராட்சம்
இந்த வகையான ருத்ராட்சங்கள் ஒரு முகத்தைக் கொண்டு இருக்கும். மேலும் இது மிகவும் சக்தி வாய்ந்தாகவும் கருதப்படுகிறது. இந்த ஒரு முகம் கொண்ட ருத்ராட்சங்கள் சிவன் மற்றம் மகாலொட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த வகையான ருத்ராட்சங்கள் சுலபமாக கிடைக்கிறது எனவே இதனை நாம் வாங்கி பயன் பெறலாம். இந்த ஒரு முக ருத்ராட்சத்தை நாம் அணிவதால் நம் உடலில் ஏற்படும் நோய்கள் குணமாகும் என்று நம்பப்படுகிறது.
இரண்டு முக ருத்ராட்சம்
இந்த இரண்டு முக ருட்ராட்சமான சிவன் மற்றும் பார்வதியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு முக ருத்ராட்சத்தை நாம் அணிவதால் நாம் செய்த பாவங்கள் அணைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இதனை அணிவதால் மனம் ஒருநிலை அடையும் என்றும் நம்பப்படுகிறது. மேலும் இது சுவாச கோளாறு மற்றும் நுரையீரல் கோளாறு உள்ளிட்ட சில உடல் உபாதைகளையும் சரிசெய்யும் என்று கூறப்படுகிறது.
மூன்று முக ருத்ராட்சம்
இந்த மூன்று முக ருத்ராட்சங்கள் அங்கினியின் வடிவம் என்று கருதப்படுகிறது. மேலும் இதனை பிரம்மா, விஷ்ணு, மகேஷா என மூன்று தெய்வங்களின் வடிவம் என்றும் கூறுகின்றனர். இதனை அணிவதன் மூலம் மனம் தூய்மை அடையும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த மூன்று முக ருத்ராட்சத்தை நாம் அணிவதன் மூலமாக எலும்பு, காது, கழுத்து ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும் என்று கூறப்படுகிறது.
நான்கு முக ருட்ராட்சம்
இந்த நான்கு முக ருத்ராட்சங்கள் வியாழன் கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. இதனை நாம் அணிவதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இதனை வளமை மற்றும் செல்வத்தின் வடிவம் என்றும் கூறுகின்றனர். இந்த நான்கு முக ருத்ராட்சத்தை அணிவதன் மூலம் வாதம் உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.
ஐந்து முக ருத்ராட்சம்
மக்கள் பலரால் விரும்பி அணியப்படுவது தான் ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சம். இது மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள ருத்ராட்சம் ஆகும். இந்த ருத்ராட்சத்தை நாம் அணிவதம் மூலம் தெய்வ சக்தி நம்மோடு இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் இதனை அணிவதால் விபத்துகள் மற்றும் அகால மரணம் அடைவதில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம் என்று நம்பப்படுகிறது.
ஆறு முக ருத்ராட்சம்
இந்த ஆறு முக ருத்ராட்சம் ஆறு முகங்களை கொண்டு இருக்கும். இதனை நாம் அணிவதன் மூலம் எப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் இருந்தும் நாம் வெளியே வருவதற்கான தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இதனால் தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சனைகளும் விலகும் என்று கூறப்படுகிறது.
ஏழு முக ருத்ராட்சம்
இந்த ஏழு முக ருத்ராட்சமும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ருத்ராட்சம் தான். இதனை பலர் தேடி வாங்கி அணிந்துக்கொள்வர். இந்த ருத்ராட்சத்தை நாம் அணிவதன் மூலம் சுவாச கோளாறு பிரச்சனைகள் மற்றும் சைனஸ் போன்ற பிரச்சனைகளும் நீங்கும் என்று மக்களால் நம்பப்படுகிறது. மேலும் இந்த ருத்ராட்சத்தில் சனியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
எட்டு முக ருத்ராட்சம்
இந்த எட்டு முக ருத்ராட்சங்கள் விநாயகரின் வடிவமாக பார்க்கப்படுகிறது. இந்த வகையான ருத்ராட்சங்களை நாம் அணிவதன் மூலம் உடலில் உள்ள பல விதமான நோய்களும் நீங்கும் என்று மக்களால் நம்பப்படுகிறது.
ஒன்பது முக ருத்ராட்சம்
ஒன்பது முகம் கொண்ட இந்த ருத்ராட்சம் நம் ஒன்பது புலன்களையும் அடக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனை அணிவதால் நம்மிடம் உள்ள பாவங்கள் அனைத்தும் நீக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இதனை அணிவதால் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.
பத்து முக ருத்ராட்சம்
இந்த பத்து முகங்கள் கொண்ட ருத்ராட்சம் விஷ்ணுவின் வடிவமாக பார்க்கப்படுகிறது. இதனை அணிவதன் மூலம் நமக்கு நடக்கவிருக்கும் தீமைகளை தடுக்கும் சக்திக் கொண்டதாகவும் இந்த பத்து முக ருத்ராட்சம் இருக்கிறது.
பதினோரு முக ருத்ராட்சம்
பதினோரு கோடுகளை கொண்ட ருத்ராட்சம் பதினோரு முக ருத்ராட்சம் என்று அழைக்கப்படுகிறது. இதனை தியான செய்பவர்கள் அணிய சிறந்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த பூமியில் மொத்தம் 38 வகை ருத்ராட்சம் இருப்பதாகவும் அவற்றில் 1, 11, 7, 8, 9 முக ருத்ராட்சங்கள் அனைவருக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்து விடுவது இல்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் 12 முதல் 21 வரையிலான முகம் கொண்ட ருத்ராட்சங்கள் சுலபமாக கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
நாம் இப்பதிவில் ருத்ராட்சத்தின் முகங்கள் மற்றும் அவற்றை நாம் அணிவதால் ஏற்படும் பலன்கள் ஆகியவற்றை விரிவாக பார்த்துள்ளோம்.