Beetroot Chips in tamil: பொதுவாக குழந்தைகளுக்கு காய்கறிகள் என்றால் பிடிக்காது மேலும் பழங்களையும் அவ்வளவாக விரும்பி அவர்கள் சாப்பிடுவதில்லை. இதுவே ஐஸ்கிரீம். சாக்லேட். கேக். சிப்ஸ் போன்ற ஸ்னாக்ஸ் வகைகளை அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள்.
ஆனால் இவற்றையெல்லாம் கடைகளில் வாங்கி கொடுக்காமல் வீட்டில் எளிமையான முறையில் ஆரோக்கியமாக செய்து கொடுத்தால் அவர்களின் ஆரோக்கியத்தை நம்மால் பாதுகாத்துக் கொள்ள முடியும். அந்த வகையில் பீட்ரூட் வைத்து சுவையான பீட்ரூட் சிப்ஸ் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பீட்ரூட் -2
கரம் மசாலா -1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
சோள மாவு – 1ஸ்பூன்
கடலை மாவு – 1ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை
முதலில் பீட்ரூட்டை தோல் சீவி கழுவி எடுத்து வைத்துக்கொண்டு ஈரம் இல்லாமல் சிப்ஸ் எப்படி வேண்டுமோ நீளமாகவோ அல்லது வட்டமாகவோ வெட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் எடுத்து வைத்துள்ள கரம் மசாலா, மிளகாய் தூள், சோள மாவு, கடலைமாவு தேவையான அளவு உப்பு, சிறிது அளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்பொழுது அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எடுத்து வைத்துள்ள பீட்ரூட்டை அதில் போட்டு மிதமான தீயில் நன்றாக பொறித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு பொறித்து வைத்துள்ள பீட்ரூட்டை ஒரு டிஸ்யூவில் எடுத்து வைத்து பரிமாற சுவையான பீட்ரூட் சிப்ஸ் தயார்.
மேலும் படிக்க: தோசை மாவு இல்லையா? தக்காளி இருந்தால் போதும் சுவையான தக்காளி தோசை ரெடி..!!