HAIR DYE:வெள்ளை முடியை அடர் கருமையாக்கும் சிம்பிள் ஹேர் டை!! 3 பொருட்கள் இருந்தால் சட்டுன்னு தயாரித்து நரையை பட்டுனு போக்கலாம்!!
நம் தலைமுடி கருப்பு நிறத்தில் இருந்தால் தான் அழகு.இந்த நிறத்தை தவிர வேறு எந்த நிறத்தில் முடி இருந்தாலும் அவை பார்க்க நன்றாக இருக்காது.நம் தலையில் ஒரு வெள்ளை முடி வந்து விட்டால் கூட நமக்கு வயதாகி விட்டதோ என்று வருத்தும் கொள்கின்றோம்.
ஆனால் சிலருக்கு பள்ளி பருவத்திலேயே இளநரை வந்து விடுகிறது.அவர்களின் நிலைமையை நினைத்து பாருங்கள்.தலையில் இளநரை உருவாவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.மன அழுத்தம்,முடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து இல்லாமை,கெமிக்கல் ஷாம்புகள் பயன்படுத்தல் போன்ற காரணங்களால் இளநரை உருவாகிறது.இதை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு பக்க விளைவுகள் இன்றி கருமையாக்கி கொள்ளும் வழிமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)கறிவேப்பிலை
2)வெந்தயம்
3)பூண்டு தோல்
செய்முறை:-
ஒரு மிக்ஸி ஜாரில் 2 தேக்கரண்டி வெந்தயம்,ஒரு கைப்பிடி அளவு பூண்டு தோல் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து அரைத்த பவுடரை போட்டு மிதமான தீயில் நன்கு வறுக்கவும்.
அடர் கருமை நிறத்திற்கு வரும் வரை கருக விட வேண்டும்.பின்னர் இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் கொட்டி நைஸ் பவுடராக அரைக்கவும்.பின்னர் இதை ஒரு தட்டில் சலித்து ஈரமில்லாத டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:-
ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி அரைத்த பொடி,1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் 1 தேக்கரண்டி விளக்கெண்ணெய் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு கலக்கவும்.
இந்த பேஸ்ட்டை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.பின்னர் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசவும்.இவ்வாறு 2 வாரங்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் தலையில் உள்ள வெள்ளை முடி அடர் கருமையாக மாறிவிடும்.