ஆண்களே உங்கள் தலையில் வழுக்கை விழாமல் இருக்க உடனே இதை ட்ரை பண்ணுங்கள்!!
தலைமுடி உதிர்வு பிரச்சனையால் பெண்களை விட ஆண்கள் அதிகம் அவதியடைகின்றனர்.தலையை சீவும் பொழுது முடி வேர் வேராக வருவதை கண்டு பலர் வருந்தி வருவீர்கள்.
நம் பாட்டி,தாத்தா காலத்தில் 50 வயதை கடந்த பின்னரே முடி உதிர்தல் பிரச்சனை ஏற்பட்டது.ஆனால் இன்று இளம் வயதிலேயே வழுக்கை தலையுடன் பலர் சுற்றித் திரிகின்றனர்.சிலர் விக் அல்லது செயற்கை முடி ஒட்டிக் கொள்கின்றனர்.
ஆனால் வழுக்கை வராமல் இருக்க வழுக்கை தலையில் முடி வளர கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றி வந்தால் உரியத் தீர்வு கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)வடித்து ஆறவைத்த கஞ்சி
2)கற்றாழை ஜெல்
3)சின்ன வெங்காயம்
4)செம்பருத்தி இதழ்
5)செம்பருத்தி இலை
செய்முறை:-
ஒரு மிக்ஸி ஜாரில் 10 செம்பருத்தி இலை,10 செம்பருத்தி இதழ்,தோல் நீக்கிய சின்ன வெங்காயம் 5,ஒரு துண்டு கற்றாழை ஜெல் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
இந்த பேஸ்டை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்கு ஊற விடவும்.பின்னர் வடித்து ஆறவைத்த கஞ்சி பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும்.
இவ்வாறு வாரம் இருமுறை தலைக்கு குளித்து வந்தால் முடி உதிர்வு நின்று முடி கொட்டிய இடத்தில் புதிய முடி வளரத் தொடங்கும்.
தேவையான பொருட்கள்:-
1)வைட்டமின் ஈ மாத்திரை
2)தேங்காய் எண்ணெய்
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி சுத்தமான தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு வைட்டமின் ஈ மாத்திரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பிறகு இதை தலை முழுவதும் அப்ளை செய்து 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும்.இவ்வாறு வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் வழுக்கை விழுந்த தலையில் புதிதாக முடி வளர ஆரம்பிக்கும்.