Beauty Tips

உங்கள் கண் இமை அழகாகவும் தடிமனாகவும் இருக்க ஆசையா? அப்போ இந்த டிப்ஸை ரெகுலரா பாலோ பண்ணுங்கள்!!

Do you want your eyelashes to be beautiful and thick? So follow these tips regularly!!

உங்கள் கண் இமை அழகாகவும் தடிமனாகவும் இருக்க ஆசையா? அப்போ இந்த டிப்ஸை ரெகுலரா பாலோ பண்ணுங்கள்!!

நம் அழகை அதிகரித்து காட்டுவதில் கண்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.அந்த கண்களின் அழகு அதன் இமைகளில் தான் இருக்கிறது.உங்களில் பலர் கண் புருவத்திற்கு காட்டும் அக்கறையை கண் இமைகளுக்கு காட்டுவதில்லை.அதனால் தான் உங்களில் பலருக்கு இமைகள் மெல்லியதாக இருக்கிறது.

கண் இமைகள் அடர்த்தியாகவும்,கருமையாகவும் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்புகள் தங்களுக்கு உதவும்.

1)விளக்கெண்ணெய்

தினமும் இரவு தூங்குவதற்கு முன்னர் கண் இமைகளுக்கு சுத்தமான விளக்கெண்ணெய் அப்ளை செய்யவும்.இவ்வாறு செய்வதினால் மெல்லிய கண் புருவம் அடர்த்தியாகவும்,கருமையாகவும் காட்சியளிக்கும்.

2)கற்றாழை ஜெல்

ஒரு துண்டு கற்றாழை மடலின் தோலை நீக்கிட்டு அதன் ஜெல்லை பேஸ்ட் பதத்திற்கு அரைத்து சேமித்துக் கொள்ளவும்.இதை தினமும் கண் இமைகளுக்கு அப்ளை செய்து வந்தால் இமைகள் அடர்த்தியாகவும்,,கருமையாகவும் வளரும்.

3)ஆலிவ் ஆயில்

தினமும் இருவேளை ஆலிவ் ஆயிலை கண் இமைகளுக்கு அப்ளை செய்து வந்தால் அவை அழகாக காட்சியளிக்க தொடங்கும்.

4)தேங்காய் எண்ணெய்

கண் இமைகளின் மீது தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து வந்தால் அவை வசீகர தோற்றத்தை கொடுக்கும்.

5)பாதாம் எண்ணெய்

சிறிதளவு பாதாம் எண்ணையை கண் இமைகளின் மீது அப்ளை செய்து வந்தால் அவை அடர்த்தியாக காட்சியளிக்கும்.

6)க்ரீன் டீ

தினமும் ஒரு கப் க்ரீன் குடித்து வந்தால் கண் இமைகள் கருமையாகவும்,அடர்த்தியாகவும் காட்சியளிக்கும்

CURLY HAIR? உங்கள் சுருள் முடி ஸ்ட்ரைட் ஆகணுமா? அப்போ இந்த பேஸ்டை தலை முழுவதும் அப்ளை செய்யுங்கள்!!

சமூக ஊடகங்களில் மோடி குடும்பம் பெயரை மாற்ற மோடி கோரிக்கை