யக்ஷினி தெலுங்கு வெப் சீரிஸில் களம் இறங்குகிறார் வேதிகா

Photo of author

By Janani

யக்ஷினி தெலுங்கு வெப் சீரிஸில் களம் இறங்குகிறார் வேதிகா

நடிகை வேதிகா தெலுங்கு வெப் சீரிஸ் ஆனா யக்ஷினி தொடரில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நடிக்கும் தென்னிந்திய நடிகை ஆவார் வேதிகா. இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை துறையில் அறிமுகமானார். இத்திரைப்படம் தெலுங்கில் சிவகாசி என மொழிபெயர்க்கப்பட்டது.

ஆனால் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளிவந்த பரதேசி படத்தின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார். அதனை தொடர்ந்து பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் நடித்த முனி, காளை, சக்கரகட்டி, பரதேசி, காவியத்தலைவன், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்கள் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

தற்போது பிரபுதேவா உடன் பேட்ட ராப் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஜங்கிள், வினோதன் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் வெப் சீரிஸ்களிலும் நடிகை வேதிகா நடிக்க தொடங்கி உள்ளார். இந்த வெப் சீரிஸ் தமிழ் மற்றும் தெலுங்கு என பழமொழிகளில் வெளியாக உள்ளது. மேலும் பிரபல ஓ.டி.டி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஜூன் 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.