மேடையில் தமிழிசையிடம் கடிந்து கொண்ட அமித்ஷா! வைரலாகும் வீடியோ
2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19 அன்று தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்றது.இந்த லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா,ஒடிசா,அருணாச்சலப் பிரதேசம்,சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.இதில் ஆந்திராவில் தெலுங்கு தேசக் கட்சி வெற்றி பெற்ற நிலையில் இன்று(ஜூன் 12) கன்னாவரம் பகுதியில் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆட்சியமைப்பதற்கான பதவியேற்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பிரதமர் மோடி,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாய்டு,முன்னாள் தமிழக பாஜக தலைவரும் தெலுங்கானா,புதுச்சேரியின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன்,தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்,தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழிசையிடம் கோபத்தை காட்டிய அமித்ஷா
விழா மேடையில் அமர்ந்திருப்பவர்களுக்கு தமிழசை,வணக்கம் சொல்லியபடி சென்றார்.அப்பொழுது மேடையில் அமர்ந்திருந்த அமித்ஷா,தமிழிசையை அழைத்து முகத்தை கோபமாக வைத்தபடி பேசி இருக்கிறார்.தமிழிசையும் அமித்ஷாவின் பேச்சுக்கு விளக்கம் கொடுக்க முயல்கிறார்.ஆனால் அமித்ஷா,தமிழிசை சொல்வதை காதில் கொள்ளாமல் நோ.. நோ.. என்று விரலை ஆட்டியவாறு பேசும் வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகாத நிலையில் அமித்ஷா,தமிழிசையை கண்டிக்கும் வகையில் அந்த வீடியோ இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆதரவாளர்கள் மற்றும் தமிழிசை ஆதரவாளர்களிடையே மோதல் போக்கு நிலவி வருவதால் தமிழகத்தில் உட்கட்சி பூசல் அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக விழா மேடையில் அமித்ஷா அவர்கள் தமிழிசை மீது அதிருப்த்தியை வெளிப்படுத்திருக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.