தொண்டை கரகரப்பாக இருக்கின்றதா! அப்போ தினமும் இரண்டு வேலை இதை மட்டும் சாப்பிடுங்க!
நம்மில் ஒரு சிலருக்கு இருக்கும் தொண்டை கரகரப்பு பிரச்சனையை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு சிலருக்கு சளி பிடித்திருக்கும் நேரத்தில் இருமல் பிரச்சனை ஏற்படும். இருமல் பிரச்சனை வந்தாலே தொண்டை வலி, தொண்டை கரகரப்பு ஆகிய பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு காரணம் நம் தொண்டையில் புண் இருக்கலாம். அல்லது சளி ஒட்டிக் கொண்டிருக்கலாம். இதனால் தொண்டை கரகரப்பாக இருக்கும்.
தொண்டை கரகரப்பாக இருந்தால் ஒரு சிலர் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவார்கள். ஒரு சிலர் தங்களுக்கு தெரிந்த வைத்தியங்களை செய்வார்கள். இருப்பினும் தொண்டை கரகரப்பு பிரச்சனை சரியாகாது. இந்த பதிவில் தொண்டை கரகரப்பு பிரச்சனையை சரி செய்வது எவ்வாறு என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* ஏலக்காய்
* மிளகு
* திப்பிலி
* சுக்கு
* தேன்
செய்முறை…
முதலில் ஒரு உரல் அல்லது மிக்சி ஜார் எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் ஏலக்காய், மிளகு, திப்பிலி, சுக்கு இவற்றை போட்டு பொடியாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த பொடியில் சிறிகளவு தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். தொண்டை கரகரப்பை சரியாக்கும் மருந்து தயாராகி விட்டது.
இந்த மருந்தை தினமும் காலை மற்றும் மாலை என்று இரண்டு வேளைகள் சாப்பிட்டு வர வேண்டும். அவ்வாறு இரண்டு வேளைகள் சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு பிரச்சனை விரைவில் குணமடையும்.