இனி ஹீமோகுளோபின் அதிகரிக்க கறி சாப்பிட தேவையில்லை!! இதோ இந்த எண்ணெய் தேங்காய் போதும்!!
பொதுவாக தேங்காய் சாப்பிட்டாலே நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதே போல எண்ணெய் ஆட்டுவதற்கு தயார். செய்யப்படும் எண்ணெய் தேங்காயை சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பது குறித்து பார்க்கலாம்.
எண்ணெய் தேங்காயில் உடலுக்குத் தேவையான வைட்டமின் பி6, கால்சியம், தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், ஆன்டிஆக்சிடன்ட் போன்ற சத்துக்கள் இருக்கின்றது. இத்தனை சத்துக்கள் நிறைந்த எண்ணெய் தேங்காயை அதாவது வெயிலில் காய வைத்த தேங்காயை நாம் சாப்பிட்டால் நமது ஆரோக்கியம் மேம்படும். இந்த எண்ணெய் தேங்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தற்பொழுது பார்க்கலாம்.
எண்ணெய் தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…
* உலர்ந்த தேங்காய் அதாவது எண்ணெய் தேங்காயை சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை நோய் குணமடைகின்றது.
* எண்ணெய் தேங்காயை சாப்பிடுவதால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து இரத்தத்தின் அளவு அதிகரிக்கின்றது.
* எண்ணெய் தேங்காயை சாப்பிடுவதால் நம்முடைய உடலுக்கு பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றது. இதனால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.
* எண்ணெய் தேங்காயில் அதிக அளவு ஆன்டிஆக்சிடன்ட் சத்துக்கள் இருக்கின்றது. இவை நம் இதயத்தில் உள்ள தமனிகளில் பிளாக் உருவாவதை தடுத்து இதய நோய் அபாயத்தை குறைக்கின்றது.
* எண்ணெய் தேங்காயில் நார்ச்சத்துக்கள் இருக்கின்றது. எனவே எண்ணெய் தேங்காய் சாப்பிட்டு வந்தால் செரிமானக் கோளாறுகள் அனைத்தும் நீங்கும். செரிமானம் சிறப்பாக நடைபெறும்.
* எண்ணெய் தேங்காயில் அதிகளவு கால்சியம் சத்துக்கள் இருக்கின்றது. கால்சியம் சத்துக்கள் எலும்புகளுக்கு ஆரோக்கியத்தையும் பலத்தையும் அளிக்கும்.
* மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் அனைவரும் எண்ணெய் தேங்காய் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.
* எண்ணெய் தேங்காயை சாப்பிட்டு வந்தால் பசியுணர்வை குறைக்கின்றது.
* எண்ணெய் தேங்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.
* மூட்டுவலி பிரச்சனை இருப்பவர்கள் எண்ணெய் தேங்காய் சாப்பிட்டு வரலாம். இதனால் மூட்டு வலி மூட்டு வீக்கம் எல்லாம் குறையும்.
* எண்ணெய் தேங்காயை சாப்பிட்டு வந்தால் நம்முடைய சருமம் எப்பொழுதும் நீரேற்றமாக இருக்கும். இதனால் சருமம் பளபளப்பாக மாறும். மென்மையாகவும் மாறும்.