இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே.. அரவிந்த்சாமி தத்துபிள்ளையா!!

Photo of author

By Rupa

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே.. அரவிந்த்சாமி தத்துபிள்ளையா!!

டெல்லி குமார் இவர் பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர். இவர் சன் தொலைகாட்சியில் வெளியான மிகவும் பிரபலமான தொடர்களான மெட்டிஒலி, ஆனந்தம் ,சித்தி ,மலர்கள் ஆகிய தொடர்களிலும் வெள்ளி திரையில் டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால், இந்திரன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அரவிந்த்சாமி 18 ஜூன் 1970 ல் தமிழ்நாட்டில் பிறந்தார் இவர் 90’s காலகட்டத்தில் நடித்த படங்களில் நல்ல கதாநாயகனாகவும் பெண்களின் கனவு கண்ணனாகவும் வலம் வந்தார்.

இப்போதும் பல படங்களில் ஹைடெக் வில்லனாகவும் சிறப்பாக நடித்து வருகிறார். இவருக்கு 2001 ஆம் ஆண்டு முதல் திருமணம் நடந்தது ஆனால் அந்த திருமணம் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்தில் முடிந்தது. பின்பு 2014 ஆம் அண்டு இரண்டாவது திருமணம் நடைபெற்றது ஆனாலும் இவரது குழந்தைகளை இவர் பாதுகாப்பில் வளர்த்து வருகிறார். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

டெல்லி குமார் மகனான அரவிந்த்சாமி பிறந்த உடனே டெல்லி குமாரின் உடன் பிறந்த சகோதரிக்கு குழந்தை இல்லை என்ற காரணத்தினால் அவருக்கு தத்து கொடுத்துவிட்டார். இது அரவிந்த்சாமி-க்கும் தெரியும். என்னுடன் அவர் அதிக அளவில் நெருக்கமாக இருந்ததில்லை. அவர்களையே தாய், தந்தை என மிகவும் பாசத்துடன் வாழ்ந்து வருகிறார். என் சகோதரியும் அவர் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளார்.

எப்போதும் எங்கள் வீட்டில் நடக்கும் அனைத்து விசேஷங்களிலும், துக்கங்களிலும் கலந்து கொள்ளவர். என்னதான் நான் தத்து கொடுத்திருந்தாலும் அவர் என் மகன் என்பதில் இந்த மாற்றமும் இல்லை என்பதை தெளிவாக ஒரு பேட்டியில் டெல்லி குமார் தெரிவித்துள்ளார்.