ரயிலில் எந்த பெட்டியில் பயணிப்பது மிகவும் பாதுகாப்பது என்று தெரியுமா? இனி இதையே முன்பதிவு செய்யுங்கள்!
நம் நாட்டிலுள்ள குறைவான விபத்துக்களை சந்திக்கும் போக்குவரத்துகளில் ஒன்று ரயில் போக்குவரத்து.இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர்.ஆனால் ரயில் விபத்து ஏற்பட்டால் அவை கோரமாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலத்தின் பஹானாகா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதில் 280 பேர் உயிரிழந்த சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது.இந்த கோர விபத்தின் நிகழ்வுகளே இன்னும் ஆறாத வடுவாக உள்ள நிலையில் நேற்று(ஜூன் 17) கொல்கத்தாவின் மேற்கு வங்கத்தில் கன்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.இந்த கோரவிப்பதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் தொடர் ரயில் விபத்துகளால் ரயில் பயணம் மேற்கொள்ள பலர் தயக்கம் காட்டத் தொடங்கியிருக்கின்றனர்.ரயிலில் எந்த பெட்டியை முன்பதிவு செய்தால் விபத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்று யோசிக்கும் மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டனர்.
இந்நிலையில் ரயிலில் பாதுகாப்பான பெட்டிகள் எது என்பது குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.அதன்படி ரயிலில் மிகவும் பாதுகாப்பான பெட்டி என்றால் B4 தான் என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.ரயிலில் B1 முதல் B4 வரை உள்ள பெட்டிகள் ஏசி பெட்டிகளாகும்.
அதேபோல் S1 முதல் S3 வரை உள்ள பெட்டிகள் ஸ்லீப்பர் பெட்டிகளாகும்.இதில் B4க்கு அடுத்து வரும் S1 தான் பயணம் செய்ய பாதுகாப்பான பெட்டி என்று பலர் தெரிவித்து வருகின்றனர்.ஆனால் உண்மையில் ரயிலின் நடுப்பகுதியில் உள்ள B4 தான் பாதுகாப்பான பெட்டி என்று சொல்லப்படுகிறது.