நோட் பண்ணிக்கோங்க.. உங்கள் பிரிட்ஜின் கூலிங் குறைய இதெல்லாம் தான் காரணம்!! இனி இந்த தவறை செய்யாதீர்கள்!
இன்றைய நவீன உலகில் பிரிட்ஜ் இல்லாத வீட்டை பார்ப்பது அரிதாகி விட்டது.நம் ஊரில் காய்கறிகளை பிரஸாக வைப்பதற்கும்,இட்லி தோசை மாவை புளிக்காமல் வைப்பதற்கும் தான் பிரிட்ஜ் பயன்படுத்தப்படுகிறது.என்ன தான் பிரிட்ஜில் வைத்து பதப்படுத்தப்பட்டு உண்ணும் உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்றாலும் இதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை.
நாம் பயன்படுத்தும் பிரிட்ஜில் சிங்கள் டோர்,டபுள் டோர் என்று இருவகை உள்ளது.இந்நிலையில் நீங்கள் நீண்ட வருடங்களாக பிரிட்ஜ் பயன்படுத்தி வருபவர்களா இருந்தால் உங்கள் பிரிட்ஜில் நிகழும் இந்த மாற்றங்களை கண்டிப்பாக உணர்ந்திருப்பீர்கள்.
நீங்கள் புதிதாக வாங்கிய போது இருந்த பிரிட்ஜில் இருந்து வெளியேறும் கூலிங் தற்பொழுது வரை நீடித்தால் நீங்கள் உங்கள் பிரிட்ஜை முறையாக பராமரிக்கிறீர்கள் என்று அர்த்தம்.அதுவே உங்கள் பிரிட்ஜில் இருந்து குறைவான கூலிங் வெளியேறுகிறது என்றால் அதை உடனடியாக கவனிக்க வேண்டுமென்று அர்த்தம்.
பிரிட்ஜை வாரத்தில் ஒருமுறை சுத்தம் செய்வது அவசியம்.இதனால் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி பிரிட்ஜின் கூலிங்கை அதிகரிக்க முடியும்.
பிரிட்ஜை திறந்தால் அதை சரியாக மூட வேண்டும்.ஒரு சிலர் சரியாக பிரிட்ஜ் டோரை மூட மாட்டார்கள்.இதனால் பிரிட்ஜின் கூலிங் மற்றும் மின்சாரம் வீணாகுகிறது.
ப்ரீசரில் உள்ள ஐஸ்கட்டிகளை அவ்வப்போது அப்புறப்படுத்தினால் பிரிட்ஜின் கூலிங் அதிகரிக்கும்.
பிரிட்ஜ் டோரில் உள்ள காஸ்கெட்டில் வெடிப்பு,ஓட்டை இருந்தால் அவை பிரிட்ஜின் கூலிங்கை குறைத்து விடும்.எனவே இதை கவனித்து சரி செய்வது அவசியமாகும்.
உங்களுடைய பிரிட்ஜ் டெம்பிரேச்சர் 4 டிகிரி செல்சியஸாகவும்,ப்ரீசர் டெம்பிரேச்சர் 0 டிகிரி செல்ஸியஸ் அல்லது -18 டிகிரி செல்சியஸாகவும் இருக்க வேண்டும்.
பிரிட்ஜில் வைக்கும் பொருட்கள் சரியாக பேக் செய்யப்பட்டிருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.முடிந்தவரை அனைத்து பொருட்களையும் பேக் செய்து வைப்பதின் மூலம் கூலிங்கை தக்க வைத்துக் கொள்ள முடியும்.அதேபோல் பிரிட்ஜில் பொருட்கள் திணிக்கப்படக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பிரிட்ஜின் கன்டென்சர் காயிலில் அழுக்கு,தூசி படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.பிரிட்ஜில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் பிரிட்ஜ் மெக்கானிக் மூலம் அதை சரிபார்த்துக் கொள்வது நல்லது.