தோல் அரிப்பினால் அவதிப்படுகிறீர்களா? இதை குணமாக்க இந்த மேஜிக் க்ரீமை அப்ளை செய்யுங்கள்!!

Photo of author

By Divya

தோல் அரிப்பினால் அவதிப்படுகிறீர்களா? இதை குணமாக்க இந்த மேஜிக் க்ரீமை அப்ளை செய்யுங்கள்!!

காற்று,தூசு,சரும பிரச்சனை காரணமாக தோலில் அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த தோல் அரிப்பால் பொது இடங்களில் அசௌகரிய சூழல் ஏற்படும்.எனவே இதை தவிர்க்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றுவது நல்லது.

தேவைப்படும் பொருட்கள்:

1)துளசி இலை
2)கொத்தமல்லி தழை
3)வேப்பிலை

செய்முறை:

ஒரு மிக்ஸி ஜாரில் 25 சிறிதளவு துளசி,1/4 கைப்பிடி அளவு கொத்தமல்லி தழை,1/4 கைப்பிடி அளவு வேப்பிலை போட்டு 50 மில்லி தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.பின்னர் அதில் 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்,1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.இந்த க்ரீமை ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை

உங்கள் சருமத்தில் ஏற்படும் அரிப்பை பொறுத்து தயாரித்து வைத்துள்ள க்ரீமை அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து குளிக்கவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் தோலில் ஏற்படும் அரிப்பு பிரச்சனை சரியாகும்.

தேவைப்படும் பொருட்கள்:

1)கற்றாழை ஜெல்
2)வேப்ப எண்ணெய்

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் ஒரு தேக்கரண்டி வேப்ப எண்ணெய் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.இதை தோலில் அப்ளை செய்து குளித்து வந்தால் அரிப்பு,எரிச்சல் உணர்வு சரியாகும்.

தேவைப்படும் பொருட்கள்:

1)பேக்கிங் சோடா
2)தேங்காய் எண்ணெய்

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.இதை அரிப்பு ஏற்படும் இடத்தில் அப்ளை செய்வதால் அந்த பாதிப்பு சரியாகும்.

தேவைப்படும் பொருட்கள்:

1)ஆப்பிள் சீடர் வினிகர்
2)காட்டன் பஞ்சு

செய்முறை:

ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரில் காட்டன் பஞ்சை நனைத்து உடலில் அரிப்பு ஏற்படும் இடத்தில் பூசி வந்தால் அவை உடனடியாக குணமாகி விடும்.