பெண்களே வட்டி மட்டும் 31,000 கிடைக்க உடனே இந்த திட்டத்தில் அப்ளை செய்யுங்கள்!!
பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் அவர்களின் சேமிப்பை ஊக்குவிக்கவும் கடந்த 2023 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அஞ்சல் திட்டம் “மகிளா சம்மான் சேமிப்பு திட்டம்”.பெண்கள் மத்தியில் இவை ஒரு நல்லத் திட்டமாக பார்க்கப்படுகிறது. வெறும் இரண்டு ஆண்டு சேமிப்பு திட்டம் என்றாலும் இதில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்பது இதன் முக்கிய அம்சம்.
மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ.1,000 மற்றும் அதிகபட்ச முதலீடு ரூ,2,00,000 ஆகும்.2 ஆண்டுகள் முடிவில் அசல் தொகைக்கு 7.5% வட்டிகிடைக்கும்.உங்கள் வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் பெயரிலும் இந்த சேமிப்பு கணக்கை தொடங்கலாம்.இந்த சேமிப்பு திட்டத்தில் சேர்ந்த மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு கணக்கு தொடங்கலாம்.
உதாரணத்திற்கு நீங்கள் ரூ.2,00,000 முதலீடு செய்கிறீர்கள் என்றால் முதல் வருட முடிவில் ரூ.15,000 வட்டி கிடைக்கும்.இரண்டாவது வருட முடிவில் அசல்+வட்டி+கூட்டு வட்டி என்று மொத்தமாக ரூ.2,32,044 உங்கள் கைக்கு கிடைக்கும்.பெண்கள் தங்கள் சேமிப்பை தங்கமாக மட்டுமல்ல இது போன்ற நல்ல திட்டங்கள் மூலமம் பெருக்க முடியும்.
மகிளா சம்மன் சேமிப்பு திட்டம்: எப்படி முதலீடு செய்வது?
உங்கள் ஊரில் இருக்கின்ற அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று இந்த சேமிப்பு திட்டத்தை தொடங்கலாம்.இதற்கு ஆதார்,முகாரி சான்று,பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு கேட்கப்படும் ஆவணங்களை இணைத்து அஞ்சல் அலுவலகத்தில் கொடுத்து மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தை தொடங்க வேண்டும்.இந்த திட்டத்தில் சேர்ந்த 6 மாதங்களுக்கு பின்னர் தங்களுக்கு தேவைப்பட்டால் கணக்கை முடித்துக் கொள்ள முடியும்.அதேபோல் கணக்கு தொடங்கி ஓர் ஆண்டு கழித்து 40% வரை சேமிப்பு கணக்கில் இருந்து எடுக்க முடியும்.18 வயதிற்கு கீழ் உள்ள பெண்கள் அவர்களது பெற்றோருடன் இணைந்து கணக்கை தொடங்க முடியும்.