ஒன்றுக்கும் மேற்பட்ட கேஸ் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு ஆப்பு!! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!!
மத்திய அரசானது சமையல் எரிவாயு இணைப்பை பொறுத்து மாநிலங்களுக்கு உரிய மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்து வருகிறது.தமிழகத்தை பொறுத்தவரை எரிவாயு இணைப்பு இல்லாத சுமார் 30 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அடைப்படையில் தலா ஒருவருக்கு 5 லிட்டர் வரை மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்பொழுது தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்திருக்கிறது.தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்களை விட சமையல் எரிவாயு இணைப்பு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதினால் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டிருக்கிறது என்ற விளக்கத்தை கொடுத்திருக்கிறது.
தமிழகத்தில் சுமார் 2.24 கோடி ரேசன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில் கிட்டத்தட்ட 30 லட்சம் எரிவாயு இணைப்பு இல்லாத அட்டைகளுக்கு குறைவான விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.இந்நிலையில் தமிழகத்தில் மண்ணெண்ணெய் வாங்கக்கூடிய ரேசன் அட்டைதாரர்களின் வீடுகளில் உண்மையிலேயே எரிவாயு சிலிண்டர் இணைப்பு இல்லையா? என்பதை நேரடி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உணவு வழங்கல் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட எரிவாயு இணைப்பு பெற்றிருப்பதால் தான் கேஸ் அடுப்பு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று தமிழக அரசு கருதுகிறது.இதன் காரணமாக தமிழக அரசானது மண்ணெண்ணெய் வாங்கக்கூடிய ரேசன் அட்டைதாரர்களின் வீடுகளில் உண்மையிலேயே எரிவாயு சிலிண்டர் இணைப்பு இல்லையா? என்பதை நேரடி ஆய்வு செய்ய உணவு வழங்கல் துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது.