படிக்கும் பொழுது உங்களுக்கு தூக்கம் வருகிறதா.. இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!!
உங்களில் பலர் இரவு நேரத்தை விட படிக்கும் நேரத்தில் தான் தூங்கி தூங்கி விழுவீர்கள்.புத்தகத்தை பார்த்தாலே தூக்கம் வருகிறது.அப்படி இருக்கையில் எப்படி படிப்பது என்று சிலர் புலம்புவதை கேட்டிருப்பீர்கள்.
இன்னும் ஒரு சிலர் தூக்கம் வர வேண்டும் என்பதற்காக புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள்.இவை மனிதர்களிடம் உள்ள இயல்பான குணங்கள் தான் என்றாலும் தேர்வு நேரத்தில் இவ்வாறு தூங்கினால் அவை நமக்கு தான் பெரும் பாதிப்பாக மாறும்.
ஆகையால் படிக்கும் பொழுது வரும் தூக்கத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்.முதலில் படிக்கும் பொழுது எதனால் தூக்கம் வருகிறது என்று சிந்தியுங்கள்.இவ்வாறு நடக்க நாம் செய்யும் சில தவறுகளே காரணம்.முறையற்ற உறக்கம்,உடல் சோர்வு,படிப்பில் ஆர்வமின்மை,வெறுப்போடு படித்தல் போன்ற பல காரணங்களால் படிக்கும் பொழுது தூக்கம் வருகிறது.
இரவில் நன்கு உறங்கி விட்டு மறுநாள் படித்தால் உறக்கம் வராது.சிலர் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து படிப்பார்கள்.அவ்வாறு செய்வதால் தூக்கம் வர வாய்ப்பிருக்கிறது.சிறிது நேரம் அமர்ந்த படியும்,சிறிது நேரம் நடந்த படியும் படிப்பதால் தூக்கத்தை விரட்ட முடியும்.
நல்ல வெளிச்சம் இருக்கும் அறையில் படிப்பதால் தூக்கம் வருவது கட்டுப்படும்.படிப்பதற்கு முன்னர் வயிறு முட்டும் அளவிற்கு சாப்பிடக் கூடாது.அதேபோல் படுத்துக் கொண்டு படிக்கக் கூடாது.இதனால் தூக்கம் வர அதிக வாய்ப்பு இருக்கிறது.
படிக்கும் பொழுது தூக்கம் வராமல் இருக்க படித்ததை ஒரு பேப்பரில் எழுதி பார்க்கலாம்.அதேபோல் அடிக்கடி தண்ணீர் அருந்துவதன் மூலம் உடல் களைப்பு ஏற்படாமல் இருக்கும்.இதனால் படிக்கும் பொழுது தூக்கம் வருவது கட்டுப்படும்.