உங்களுக்கு சுளுக்கு பிடித்து விட்டதா? அப்போ வெள்ளை பூண்டு மட்டும் போதும்!

Photo of author

By Sakthi

உங்களுக்கு சுளுக்கு பிடித்து விட்டதா? அப்போ வெள்ளை பூண்டு மட்டும் போதும்!
நம்மில் பலருக்கு தோள்பட்டை, கழுத்து, கணுக்கால், முழங்கால் போன்ற பகுதிகளில் எதிர்பாராத சமயங்களில் சுளுக்கு பிடிக்கும். இந்த சுளுக்கை சரி செய்ய வெள்ளை பூண்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.
பொதுவாக ஒரு நபருக்கு சுளுக்கு பிடித்துவிட்டால் சுளுக்கு பேண்டேஜ் வாங்கி சுளுக்கு பிடித்த இடத்தில் ஒட்டுவார்கள். அல்லது சுளுக்கு பிடிப்புக்கு மாத்திரை வாங்கி சாப்பிடுவார்கள். அதுவும் இல்லையேன்றால் சுளுக்கு பிடித்த இடத்தில் அழுத்தம் கொடுத்து சுளுக்கு எடுப்பார்கள்.
அந்த வகையில் இல்லாமல் நாம் சுளுக்கு எடுக்க வெள்ளைப் பூண்டை பயன்படுத்தலாம். வெள்ளை பூண்டுடன். ஒரே ஒரு பொருளை சேர்த்து பயன்படுத்துவதன் மூலமாக சுளுக்கு பிடிப்பை நீக்கலாம். அது என்ன பொருள் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* பூண்டு
* உப்பு
செய்முறை:
முதலில் வெள்ளை பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதை அம்மி அல்லது உரலில் வைத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் கல் உப்பு அல்லது பொடி உப்பு சேர்த்து இடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை சுளுக்கு பிடித்த  இடத்தில் வைத்து தடவ வேண்டும். இவ்வாறு செய்தால் சுளுக்கு காணாமல் போகும்.