PAN CARD NAME CHANGE:பான் கார்டில் உங்கள் பெயரில் பிழை இருக்கிறதா? 2 நிமிடத்தில் போனிலே மாற்றிக்கொள்ளலாம்!!

0
148
PAN CARD NAME CHANGE: Is there a mistake in your name in PAN card? Can be changed by phone in 2 minutes!!
PAN CARD NAME CHANGE: Is there a mistake in your name in PAN card? Can be changed by phone in 2 minutes!!

PAN CARD NAME CHANGE:பான் கார்டில் உங்கள் பெயரில் பிழை இருக்கிறதா? 2 நிமிடத்தில் போனிலே மாற்றிக்கொள்ளலாம்!!

நம் இந்திய அரசாங்கத்திற்கு வரி செலுத்த,பண பரிமாற்றம் செய்ய PAN எண்(Permanent Account Number) அவசியமான ஒன்றாகும்.

பான் கார்டு ஒரு பிளாஸ்டிக் தகடு வடிவத்தில் தனித்துவமான 10 இலக்க வரிவடிவ எண்களை கொண்டிருக்கும்.இது இந்திய வரித்துறையின் கீழ் லேமினேட் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.இந்திய குடிமகன்களுக்கு இவை ஒரு முக்கியமான ஆவணமாக உள்ளது.இந்த பான் கார்டில் உள்ள எண்கள் நிரந்தரமானவை.உங்கள் முகவரி மற்றும் மாநிலம் மாறினாலும் இதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

ஒருவருக்கு வழங்கப்பட்ட பான் கார்டை வேறொருவர் பெயருக்கு மாற்ற முடியாது.அது மட்டுமின்றி ஒருவர் ஒரு பான் கார்டுக்கு மேல் வைத்திருந்தால் அது நம் நாட்டின் சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது.

இந்த பான் கார்டிற்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பம் செய்யலாம்.இதற்கு வயது வரம்பு,குடியுரிமை போன்ற எதுவும் தேவைப்படாது.18 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு விண்ணப்பம் செய்ய அவர்களது பெற்றோர் கையெழுத்திட வேண்டும்.

பான் கார்டில் உங்கள் பெயரில் பிழை இருந்தால் அதை ஆன்லைன் வாயிலாக எளிதில் மாற்றுவது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

படி 01:

முதலில் https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும்.

படி 02:

பிறகு “Apply Online” என்ற ஆப்ஷனை கிளிக் செய்தல் “Application Type” என்பது ஷோ ஆகும்.பின்னர் அதை கிளிக் செய்தால் “Changes or correction in existing PAN Data/ Reprint of PAN Card (No changes in existing PAN data)” என்பது show ஆகும்.

படி 03:

அதன் பின்னர் “Category” என்பதை கிளிக் செய்யவும்.அதிலுள்ள “Individual” என்பதை கிளிக் செய்யவும்.பிறகு பான் கார்டில் உள்ள பெயர், பிறந்த தேதியை பதிவு செய்யவும்.அதன் பின்னர் மின்னஞ்சல் ஐடி,பான் நம்பர் போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும்.

படி 04:

பிறகு, “By submitting data to us and/or using our NSDL e-Gov TIN website” என்பதை கிளிக் செய்யவும்.

படி 05:

அடுத்து கேப்ட்சா குறியீட்டை டைப் செய்து “Submit” பட்டனை கிளிக் செய்யவும்.

படி 06:

பின்னர் நீங்கள் பதிவு செய்த மின்னஞ்சல் ஐடிக்கு “NSDL e-Gov இன் ஆன்லைன் பான் விண்ணப்பச் சேவையைப் பயன்படுத்தியதற்கு நன்றி. உங்கள் கோரிக்கை டோக்கன் எண் xxxxxxxx என்ற எண்ணுடன் வெற்றிகரமாகப் பதிவுசெய்யப்பட்டது, மேலும் அது PAN விண்ணப்பத்தில் வழங்கப்பட்ட உங்கள் மெயில் ஐடிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற செய்தி வரும்.

பிறகு “Continue with PAN Application Form” என்பதைக் கிளிக் செய்து உங்கள் பான் கார்டில் கையெழுத்தை புதுப்பிக்க அந்தப் பக்கத்தில் உள்ள “Signature Mismatch” என்பதைக் கிளிக் செய்யவும்.பின்னர் அனைத்து விவரங்களும் பூர்த்தி செய்து பணம் செலுத்தவும்.பிறகு கிடைக்கப்பெறும் ஒப்புகை சீட்டை பிரிண்ட் எடுத்து கேட்கப்படும் ஆவணங்களோடு சேர்த்து NSDL e-gov அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

Previous articleஒரே நெஞ்செரிச்சலாக இருக்கின்றாதா? அதை சரியாக்க இந்த கஷாயம் மட்டும் போதும்! 
Next articleஇரண்டே நாளில் மரு தானாக உதிர வெங்காயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!