ரூ.1,00,000 மானியத்தில் பிங்க் ஆட்டோ வழங்குவது குறித்த முக்கிய தகவல்!! இவர்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை!!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூடத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.ஜூன் 21 ஆம் தேதி ககேள்வி நேரத்துடன் தொடங்கிய சட்டப்பேரவையில் துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பல முக்கிய அறிவிப்புகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் வெளியிட்டார்.
இதில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 200 பெண்களுக்கு GPS பொருத்தப்பட்ட பிங்க் ஆட்டோ ரூ.1,00,000 மானியத்தில் வழங்கப்படும் என்ற அறிவிப்பு கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது.பெண்களிடம் இந்த அறிவிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட அறிவிப்பு:
“சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி,ரூ.2 கோடி செலவில் 200 பிங்க் ஆட்டோ (Pink Auto) திட்டம் செயல்படுத்தப்படும்”.
பிங்க் ஆட்டோ திட்டம்
தலைநகர் சென்னையில் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் தகுதி 200 பெண்களுக்கு பிங்க் ஆட்டோ வழங்கப்பட உள்ளது.இந்த திட்டத்திற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 200 பெண்களுக்கு GPS பொருத்திய பிங்க் கலர் ஆட்டோ ஒரு லட்சம் மானியத்தில் வழங்கப்பட இருக்கிறது.
இந்த திட்டம் வாடகைக்கு ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு ஒரு பேருதவியாக இருப்பதோடு அவை ஒரு சுயதொழிலாக உருவாகிவிடும்.இந்த திட்டத்தின் மூலம் ஆட்டோ ஓட்டும் பெண்களின் வாழ்வாதாரம் மேம்படும்.அது மட்டுமின்றி பள்ளி மற்றும் கல்லூரிக்கு பிள்ளைகள்,பெண்களுக்கு ஆட்டோ பயணம் பாதுகாப்பான ஒன்றாக மாறிவிடும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்கள்,வாகனம் ஓட்டுவதில் ஆர்வமுள்ள ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது