பாமக ஓட்டுக்களை திருட அப்பா மகன் போட்ட பலே திட்டம்!! வன்னியர் இட ஒதுக்கீட்டில் கபட நாடகமாடும் திமுக!!
அதிமுக ஆட்சியில் இருந்த போது வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் நீதிமன்ற வழக்கை காரணமாக கூறி இந்த அறிவிப்பை ரத்து செய்தது.
இதனையடுத்து இது குறித்து மேல்முறையீடு வழக்கு தொடுத்ததில் மீண்டும் 10.5% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென்றால் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த தரவுகளை சமர்ப்பிக்க வேண்டுமென்று நீதிமன்றம் வலியுறுத்தியது.
ஆனால் நீதிமன்றம் கேட்ட வகையில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தாமல் திமுக தலைமையிலான மாநில அரசு மத்திய அரசையே வலியுறுத்தி வருகிறது.அந்த வகையில் தற்போது நடந்த சட்டமன்ற கூட்டத்தில் கூட மத்திய அரசை மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால் இதனை பாமக எம்.எல்.ஏ ஜி.கே மணி உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுவே கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு சேகரிப்பின் பொழுது தற்பொழுது அமைச்சராக இருக்கும் உதயநிதி அவர்கள் 10.5 சதவீதம் வன்னியர்களுக்கு போதாது என்றும் 15 சதவீதம் கொடுக்க வேண்டும் இதற்காக போராடி கூட வாங்கி தருவோம் என்று பரப்புரையில் கூறினார்.குறிப்பாக பாமக ஓட்டுகளை கவர வேண்டும் என்பதற்காகவே இதனை தெரிவித்தார் என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க ஸ்டாலின் அவர்கள் தென் மாவட்டங்களில் வன்னியர் இட ஒதுக்கீட்டை கட்டாயம் ரத்து செய்வோம் என்று கூறியிருந்தார்.
அப்போது ஒரு சமுதாயத்திற்கு மட்டும் எடப்பாடி பாரபட்சம் காட்டுவதாகவும் சுட்டிக்காட்டி பேசினார். ஆனால் அப்பா மற்றும் மகன் இருவரும் ஒரே விவகாரத்தில் இரண்டு விதமாக ஓட்டுக்களை கவர வேண்டும் என்று இவ்வாறான கபட நாடகமாடியுள்ளனர். அதே போலவே திமுக ஆட்சிக்கு வந்ததும் வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து தற்பொழுது வரை அதை நடைமுறைப்படுத்தாமல் தட்டி கழித்து வருகிறது.
தற்போது வன்னியர்கள் அதிகமாக வசிக்கும் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக மீண்டும் இந்த வன்னியர் உள் இட ஒதுக்கீடு விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. அதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசிடம் வலியுறுத்தி உடனடி தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது.
ஆனால் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு உரிமை உள்ளது எனவும், திட்டமிட்டே திமுக வன்னியர்களை வஞ்சிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இது குறித்த ஆதாரங்கள் அனைத்தும் பகிரப்பட்டு வருவதால் இந்த தேர்தலில் இது திமுகவிற்கு பாதகமாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.