மக்களே மிஸ் பண்ணிடாதீங்க.. இதை செய்தால் ரூ.1,41,000 கிடைக்கும்!! உடனே விண்ணப்பியுங்கள்!!
நம் நாட்டில் மூத்த குடிமக்களின் எதிர்கால நலனிற்காக கொண்டுவரப்பட்ட சிறப்பான அஞ்சலக திட்டங்களில் ஒன்று “மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்”.அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டி கிடைக்க கூடிய திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது.இந்த திட்டம் மத்திய அரசாங்கத்திற்கு கீழ் வருவதால் இவை ஒரு பாதுகாப்பான சேமிப்பு திட்டமாக திகழ்கிறது.55 வயதிற்கு மேல் இருக்கும் நபர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை இந்தியாவில் உள்ள அஞ்சலகங்களில் எங்கு வேண்டுமானாலும் தொடங்கலாம்.அதேபோல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிலும் இந்த திட்டத்தில் தொடங்கி முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் ஏப்ரல்,ஜூலை,அக்டோபர்,ஜனவரி என்று ஒவ்வொரு காலாண்டிற்கு ஒருமுறை வட்டி வழங்கப்படுகிறது.இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 80C கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும்.இந்த திட்டம் தொடங்கி ஓர் ஆண்டுக்குள் முதலீட்டு தொகையை பெற 1.5% அபராதம் செலுத்த வேண்டும்.இந்த திட்டத்திற்கு தற்பொழுது 8.2% வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்:
*ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்கு தொடங்கலாம்.
*தனி நபர் அல்லது வாழ்க்கைத்துணையுடன் கணக்கு தொடங்க முடியும்.
*குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ.1000 மற்றும் அதிகபட்ச முதலீட்டு தொகை ரூ.15 லட்சமாகும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் கணக்கை தொடங்க தேவைப்படும் ஆவணங்கள்:
1)ஆதார் அட்டை
2)மூத்த குடிமக்கள் அட்டை
3)பிறப்பு சான்றிதழ்
4)பான் அட்டை
5)ரேசன் அட்டை
6)ஓட்டுநர் உரிமம்
7)கடவுசீட்டு
8)வாக்களர் அட்டை
மூத்த குடிமக்கள் தங்களுக்கு அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆவணங்களை அதனுடன் ஆவணங்களை இணைத்து கொடுத்து சேமிப்பு கணக்;கை தொடங்கலாம்.