“எல்லாமே மாறப்போகுது” மக்களே கவனியுங்கள்!! தமிழக மின்வாரியத்தின் அடுத்த அதிரடி!!
தமிழக மின்வாரியமானது மக்களுக்கு பல புதிய நலத்திட்டங்களை அவ்வபோது அமல்படுத்தி வருகிறது.சமீபத்தில் ஒரே இணையத்தின் மூலம் மின் கட்டணம் என ஆரம்பித்து பெயர் மாற்றம் வரை அனைத்தும் செய்து கொள்ளும் புதிய செயலி ஒன்றையும் அறிமுகம் செய்தது.அதுமட்டுமின்றி பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏதேனும் மின்சாரம் திருட்டுத்தனமாக உபயோகப்படுத்தப்பட்டால், தங்களின் விவரங்களை குறிப்பிடாமல் புகார் அளிக்கும் புதிய முறையையும் கொண்டு வந்தது.
இதன் மூலம் மின் திருட்டு தடுக்கப்படுவதுடன் புகார் அளிப்பவர்களுக்கும் எந்த ஒரு இடையூறும் ஏற்படாத வகையில் அமைந்தது.இதற்கு அடுத்தபடியாக ஒரு புதிய மின் தொடர்பு கொடுக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 20 முதல் 25 நாட்களான நிலையில்,இனி ஒரே வாரத்தில் கொடுக்க வேண்டுமென்ற நடவடிக்கையை கொண்டு வந்தது.இதனால் மக்கள் பலர் பயனடைந்தனர்.அதே சமயத்தில் மின் கம்பங்கள் குறித்த புகார் வந்த வண்ணமாக தான் இருந்தது.
முன்பெல்லாம் மின்கம்பங்கள் தயாரிக்கப்பட்டு ஒரு வாரம் தண்ணீரில் மிதக்க வைக்கப்படுமாம்.இதனால் மின் கம்பங்கள் பெரிய மழை வந்தாலும் கூட தாங்கும் படியும் பாதுகாப்பானதாகவும் தாயரிக்கப்பட்டது.ஆனால் தற்பொழுது தயாரிக்கும் மின் கம்பங்கள் ஒரு வாரம் கூட தண்ணீரில் மிதக்க வைக்காததால் சிறு மழை வந்தால் கூட சாயும் நிலைக்கு வந்துவிட்டது.அதேபோல மின் தொடர்பு புகார்கள் வந்தவுடன் அதனை சரிபார்க்க ஏறும் ஊழியர்களும் இதனால் பாதிப்படைந்து விபத்துக்குள்ளாக நேரிடுகிறது.
இதனையெல்லாம் தவிர்க்கும் வகையில் தற்பொழுது மின்வாரியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இனி வரும் மின் கம்பங்கள் எந்த ஒப்பந்ததாரர் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது எந்த தேதியில் என்பதை அந்தக் கம்பங்களில் பொரிப்பதாக தெரிவித்துள்ளனர்.இதன் மூலம் அதில் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவை முறையாக கண்காணிக்க முடியும்.