உங்கள் ஸ்மார்ட் போன் ஓவர் ஹீட்டாவதை தடுக்க உதவும் பெஸ்ட் டிப்ஸ்!!
உலகில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள நாம் கையடக்க கணினி(ஸ்மார்ட் போன்) பயன்படுத்தி வருகின்றோம்.வளர்ந்து வரும் உலகில் அப்டேட் ஆக ஸ்மார்ட் போன்கள் பெரிதும் உதவுகிறது.உலக நடப்பு,கல்வி,சமையல்,வேலை என்று பல நல்ல ;தகவல்களை அறிந்து கொள்ளும் நீவன கையடக்க நூலகமாக இவை திகழ்கிறது.ஆனால் இதில் எவ்வளவு நன்மைகள் இருக்கின்றதோ அதை விட பல மடங்கு ஆபத்துகள் நிறைந்திருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.
இன்று பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போனில் மூழ்கி கிடக்கின்றனர்.இதில் ஸ்மார்ட் போன் மூலம் வாழ்ககைக்கு தேவையான விஷயங்களை கற்றுக் கொள்பவர்கள் மிகவும் குறைவு.பேசுவதற்கு,வீடியோ கேம்,பொழுதுபோக்கு வீடியோக்களுக்கு மட்டுமே நேரம் செலவிடுகின்றனர்.
ஸ்மார்ட் போனை கையில் எடுத்தால் நேரம் போவது கூட தெரியாமல் மணிக்கணக்கில் பயன்படுத்துபவர்கள் தான் இங்கு அதிகம்.ஆனால் இவ்வாறு மொபைல் போன் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என்று ஆய்வு முடிவுகள் சொல்கிறது.
அதிகபட்சம் 30 நிமிடங்கள் மட்டும் தான் போனில் உரையாட வேண்டும்.நேரம் நீண்டால் போனில் வெளிப்படும் கதிர்வீச்சுகளால் தோல் பாதிப்படையும்.அது மட்டுமின்றி செவித்திறன் குறைந்து விடும்.
சிலரது போனில் 10% கூட சார்ஜ் தாண்டாது.எந்நேரமும் சார்ஜ் போட்டம் படியே போனை பயன்படுத்துவார்கள்.இந்த பழக்கம் மிகவும் ஆபத்தானது.போனில் குறைந்தது 30% சார்ஜ் இருக்க வேண்டும்.அது மட்டுமின்றி போனில் குறைவாக ஜார்ஜ் இருக்கும் பொழுது ஜார்ஜ் ஜார்ஜ் போட்டால் அவை அதிக மின்சாரத்தை இழுக்கும்.இதனால் போன் அதிக சூடாகி வெடிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.எனவே போனில் ஜார்ஜ் 50%க்கு கீழ் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல் நீண்ட நேரம் போன் பேசுவதை தவிர்க்கவும்.இதனால் போன் சூடாகி பேட்டரி செயலிழக்க வாய்ப்பிருக்கிறது.எனவே நீண்ட நேரம் போன் பேசுவது,வீடியோ கேம் விளையாடுவது போன்றவற்றை தவிர்க்கவும்.அடிக்கடி ஜார்ஜ் போடுவதை தவிர்க்கவும்.வெயில் படும் இடத்தில் போன் வைப்பதை தவிர்க்கவும்.இதனால் போனின் வெப்பநிலை உயர வாய்ப்பிருக்கிறது.