இந்த இரண்டு மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு கொரானா தொற்று வேகமாக உறுதியாகிறதாம்

0
127

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அதன் படி ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கோ, மாநில அளவில் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டால் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றும் இறப்பும் அதிகமுள்ள மாநிலங்களான மஹாராஷ்டிரா மற்றும் குஜராத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு பரிசோதனையின் ஆரம்பத்திலேயே நோய் தொற்று உறுதி செய்யப்படுகிறது.

இது மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களுடன் ஒப்பிடுகையில் இவர்களுக்கு கொரோனா தொற்று வேகமாக உறுதியாவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த மாநிலத்தில் பரவும் கொரோனாவின் வடிவம் மாறுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வருபவர்கள் பெரும்பாலும் மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு அதிக அளவில் திரும்புவதால் அவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தொற்று கண்டறியப்பட்டவர்கள் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வெளியேற்றப்படுவதற்கு முன் பரிசோதனை செய்து நெகடிவ் என்று உறுதியான பின்னரே வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.

Previous articleஅன்பழகன் உடல்நிலை – முக்கிய தகவலை வெளியிட்ட மருத்துவமனை
Next articleமக்கள் செல்வாக்கு பெற்ற முதலமைச்சர்கள் பட்டியல் – தமிழக முதல்வருக்கு எந்த இடம் தெரியுமா?