விக்கிரவாண்டி தேர்தல் எதிரொலி: சிக்கிய கட்டு கட்டான பணம்.. திமுக அமைச்சர் பதவிக்கு வரும் வேட்டு!! ஆட்டத்தை மாற்றிய பாமக!!
விக்கிரவாண்டி தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.இந்த இடைத்தேர்தலானது ஜூன் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில் நாம் தமிழர் சீமான் எதிர்க்கட்சியின் ஆதரவை நாடியுள்ளார்.மேற்கொண்டு விக்கிரவாண்டி தேர்தல் களம் அனல் பறக்கும் வகையில் வேட்பாளர்கள் பரப்புரை செய்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி தேர்தல் ஆணையமும் பறக்கும் படை உள்ளிட்டவைகளை வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மற்ற தேர்தலைப் போலவே இந்த இடைத்தேர்தலிலும் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் விதமாக இரு சக்கர வாகனம் முதல் நான்கு சக்கர வாகனம் வரை அனைத்திலும் சோதனை செய்யப்படுகிறது.அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பழவந்தாங்கல் சோதனை சாவடி வழியாக வந்த காரில் இரண்டு பெட்டிகள் முழுவதும் பணம் கட்டு கட்டாக இருந்துள்ளது. மேற்கொண்டு போலீசார் அதனை கைப்பற்றி அந்த பணத்திற்கான பொதுவான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் மாவட்ட ஆட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணத்தை எடுத்து வந்தவர் இது தனது தந்தையின் சொத்தை விற்று எடுத்து வந்ததாக கூறியுள்ளார்.ஆனால் அது ரீதியான எந்த ஒரு முறையான தரவுகளும் அவரிடம் இல்லை.இச்சமயத்தில் தான் பாமக வழக்கறிஞர் பாலு இது குறித்து குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.தற்பொழுது பழவந்தாங்கலில் கைப்பற்றப்பட்ட பணம் திமுக அமைச்சர் எவ.வேலு இந்த இடைத்தேர்தல் செலவுக்காக கொடுத்து அனுப்பியுள்ளது என்று கூறியுள்ளார்.
இது குறித்து பறக்கும் படை விசாரணை செய்ததில் அமைச்சர் கொடுத்துள்ளதும் உண்மையாகியுள்ளது.இது குறித்து ஆளும் கட்சிக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்று பாமக வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.