T20 உலக கோப்பை 2024: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இந்தியா
நேற்று நடைபெற்ற டி 20 உலக கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் கடந்த 1 மாதமாக T20 உலக கோப்பை போட்டியானது நடைபெற்று வந்தது. லீக் ஆட்டங்கள், சூப்பர் 8 சுற்றுகளை தொடர்ந்து நேற்று இறுதி போட்டியானது நடைபெற்றது. இறுதி போட்டியானது இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 20 ஓவர்களில் 176 ரன்களை எடுத்திருந்தது. அடுத்ததாக களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 177 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கியது.
இறுதி வரை வெற்றிக்காக கடுமையாக போராடிய தென் ஆப்பிரிக்க அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது. அந்த வகையில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
இறுதிவரை கடுமையாக போராடி உலககோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.