T20 உலகக்கோப்பை 2024: ஓய்வு பெறுவதற்கு முன் இருவருக்கு கிடைத்த பெருமை
நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடருடன் விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் ஓய்வை அறிவித்துள்ளார்கள். கோப்பையை வென்ற பெருமையுடன் ஓய்வை அறிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உலககோப்பை போட்டியானது விராட் கோலிக்கு 6 வது போட்டியாகவும், ரோகித் சர்மாவுக்கு 9 வது போட்டியாகவும் அமைந்திருந்தது. அந்த வகையில் உலக கோப்பை தொடரில் அதிக ரன்களை எடுத்த பெருமையானது இந்த உலகக்கோப்பை போட்டியின் மூலமாக இருவருக்கும் கிடைத்துள்ளது.
இந்த உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு முன் ரோகித் 1211 ரன்களுடனும், கோலி 1216 ரன்களுடனும் இருந்தனர். நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் கோலி 76 ரன்களை எடுத்து மொத்தமாக 1292 ரன்களுடன் நிறைவு செய்தார்.
அதே போல 5 ரன்கள் எடுத்தால் கோலியின் இடத்தை பிடிக்கலாம் என்றிருந்த நிலையில், ரோகித் 9 ரன்களில் ஆட்டமிழந்து மொத்தமாக 1220 ரன்களுடன் இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
இதில் விராட் கோலி மொத்தமாக 35 ஆட்டங்கள் ஆடி 33 இன்னிங்க்ஸில் சுமார் 1003 பந்துகளை சந்தித்துள்ளார். அதில் 111 பவுண்டரிகள் மற்றும் 35 சிக்சர்களை விளாசியுள்ளார். இந்த போட்டிகளில் 15 அரைசதங்களையம் அடித்துள்ளார். அதே போல இருமுறை டக் அவுட்டும் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அது இரண்டுமே இந்தத் தொடரில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோகித் சர்மா அதிக போட்டிகள் ஆடினாலும் பந்துகள் அடிப்படையில் குறைவாகவே பிடித்துள்ளார். இவர் இதுவரை 47 ஆட்டங்களில் 44 ஆட்டங்களை ஆடி 917 பந்துகளை சந்தித்து, 115 பவுண்டரிகள், 50 சிக்சர் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இவர் ஒரு முறை டக் அவுட் ஆகியுள்ளார், மேலும் 12 அரைசதங்களையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த வாய்ப்பு யாருக்கு?
உலகக்கோப்பையில் இவர்கள் பெற்ற இந்த பெருமையை வீழ்த்த தற்போதைய நிலையில் ஜோஸ் பட்லர் மட்டுமே அருகில் இருக்கிறார். தற்போதுவரை அவர் 1030+ எடுத்திருக்கிறார். அந்த வகையில் அவர் அடுத்த உலகக்கோப்பை ஆடினால் இந்த பெருமையை வீழ்த்த அவருக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் ஒட்டுமொத்த அளவில் பார்த்தல் ரோகித் 4231 ரன்களுடன் முன்னிலையில் இருக்கிறார், கோலி 4188 ரன்களுடன் இருக்கிறார். அதே நேரத்தில் இந்தப் பெருமை வீழ்த்தவும் பாபர் அசாம் 4145 ரன்களுடன் மிக அருகில் உள்ளார்.
உலக கிரிக்கெட்டில் கோலோச்சிய இருவர் இந்த பெருமைகளுடன் ஒரே நேரத்தில் ஓய்வை அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இவர்கள் ODI, டெஸ்ட், ஐபிஎல் போட்டியில் இன்னும் ஆறு ஆண்டுகளாவது ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.