இனி இவர்களுக்கு சிலிண்டர் மானியம் கிடைக்காது! குறைந்த விலையில் சிலிண்டர் பெறுவது எப்படி?

0
355
They will not get cylinder subsidy anymore! How to get cheap cylinder?
They will not get cylinder subsidy anymore! How to get cheap cylinder?

இனி இவர்களுக்கு சிலிண்டர் மானியம் கிடைக்காது! குறைந்த விலையில் சிலிண்டர் பெறுவது எப்படி?

நம் நாட்டில் சிலிண்டர் பயன்படுத்துபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.இதற்கு முக்கிய காரணம் பிரதமரின் உஜ்வாலா திட்டம் தான்.பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் ஏழை,எளிய மக்களுக்கு இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கும் திட்டமான உஜ்வலா திட்டத்தில் ரூ.300 வரை மானியம் வழங்கப்படுகிறது.இதனால் ரூ.500 செலுத்தினால் கேஸ் சிலிண்டர் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.இந்த திட்டத்தின் பயனாளிகள் ஏழைப் பெண்களே.இலவச கேஸ் இணைப்பு வழங்கப்படும் இந்த உஜ்வாலா திட்டத்தில் பயன்பெற சில தகுதிகள் இருக்க வேண்டும்.

யார் உஜ்வாலா திட்டத்தில் பயன்பெற முடியாது?

*வேறு சிலிண்டர் இணைப்பு பெற்றார்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது.

*18 வயதிற்கு கீழ் இருக்கும் பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது.

யாருக்கு இலவச சிலிண்டர் இணைப்பு கிடைக்கும்?

*திருமணமாகி இதுவரை கேஸ் இணைப்பு பெறாதவர்கள்

*AAY எண் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள்

*பழங்குடியின பெண்கள்,SC,ST,MBC பிரிவினர்

*18 வயதை பூர்த்தியடைந்த கேஸ் இணைப்பு இல்லாத பெண்கள்

மேலும் உஜ்வாலா திட்ட பயனாளிகள் தங்கள் KYC விவரங்களை கேஸ் ஏஜென்சியில் அப்டேட் செய்திருக்க வேண்டும்.இல்லையென்றால் மானியம் காட்டாகி விடும்.

உஜ்வாலா திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய தேவைப்படும் ஆவணங்கள்:

1)ஆதார் அட்டை

2)முகவரி சான்று(ரேசன் அட்டை)

3)பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

4)ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு திருமண பத்திரிகை

தங்களுக்கு அருகில் இருக்கின்ற கேஸ் ஏஜென்சிக்கு சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இலவச கேஸ் இணைப்பிற்கு விண்ணப்பம் செய்தால் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் இலவச அடுப்பு மற்றும் சிலிண்டர் கிடைத்துவிடும்.

Previous articleவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவினர் வாக்கு யாருக்கு? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி 
Next articleஉங்கள் WHATSAPP-இல் புதிதாக “ப்ளூ ரிங்” தென்படுகிறதா? உடனே இதை செய்யுங்கள்!