விக்கிரவாண்டி தேர்தல்: ஆட்டமே மாறுது.. அதிமுக-வின்  இந்த வாக்குகளெல்லாம் அப்படியே திமுகவிற்கு தான்!! கப் சிப் ஆன எடப்பாடி!!

Photo of author

By Rupa

விக்கிரவாண்டி தேர்தல்: ஆட்டமே மாறுது.. அதிமுக-வின்  இந்த வாக்குகளெல்லாம் அப்படியே திமுகவிற்கு தான்!! கப் சிப் ஆன எடப்பாடி!!

Rupa

Updated on:

Vikravandi Election: The game will change

விக்கிரவாண்டி தேர்தல்: ஆட்டமே மாறுது.. அதிமுக-வின்  இந்த வாக்குகளெல்லாம் அப்படியே திமுகவிற்கு தான்!! கப் சிப் ஆன எடப்பாடி!!

விக்கிரவாண்டி தேர்தலானது மும்முனைப் போட்டியாக நடைபெற்று வருகிறது. அதிமுக இந்த தேர்தலில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில் இதன் வாக்கு வங்கி யாருக்கு செல்லும் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.இதனை சீமான் தனக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டுமென எடப்பாடியிடம் ஆதரவு கேட்டார். கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து அதிமுக போராட்டம் நடத்திய பொழுதும் சீமான் தனது ஆதரவை கொடுத்தார்.

ஆனால் எடப்பாடி தனது கருத்தை தெரிவிக்காமல் தற்போது வரை மௌனம் காத்து வருகிறார்.மேற்கொண்டு பாமக நேரடியாக ஆதரவு கேட்காமல் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் புகைப்படங்களை வைத்து அதிமுகவின் வாக்கு வங்கியை கவர நினைக்கிறது.அதனை வைத்து பரப்பரையும் செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவின் பெரும்பாரியான 30% வாக்கானது  பாமக-விற்கா அல்லது சீமானுக்கா என்ற கேள்வி உள்ளது.

இதனிடையே திமுக எந்த ஒரு ஆரவாரமும் செய்யாமல் அதிமுகவின் சில குறிப்பிட்ட சமுதாய வாக்குகளை தன் பக்கம் இழுக்க திட்டம் தீட்டி வருகிறது.அதிமுகவில் உள்ள பாமக ஓட்டுகளை அன்புமணி கவர நினைக்கிறார்.அதேபோல அதிமுகவில் உள்ள தலித் ஓட்டுகளை திமுக தன் பக்கம் வர திட்டம் போட்டு வருகிறது.அதிமுக ஆட்சியில் இருந்த பொழுது ஆண்களை காட்டிலும் பெண்களுக்கான வாக்கு சதவீதம் தான் அதிகம்.இதனை தாக்கும் விதமாகத்தான் பெண்களுக்கு உண்டான பல நல திட்டங்களை திமுக நடைமுறைப்படுத்தியது.

நாளடைவில் அதிமுகவிற்கு விழும் பெண்களின் ஓட்டானது குறைந்து கொண்டே வருகிறது.இந்நிலையில் அதிமுகவில் தலித் ஓட்டுகளையும் தன் பக்கம் இழுக்க திமுக திட்டம் போட்டு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.களத்தில் திமுக மட்டும் சைலன்டாக அதிமுகவின் வாக்கு வங்கியை தன் வசம் படுத்த முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.