“மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது” அண்ணாமலைக்கு ஆர் எஸ் பாரதி கொடுத்த ரிவீட்!!

Photo of author

By Rupa

 

“மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது” அண்ணாமலைக்கு ஆர் எஸ் பாரதி கொடுத்த ரிவீட்!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் 65 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் அதனை சுட்டிக்காட்டி தமிழக அரசை பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக சட்டம் ஒழுங்கு நிலை குலைந்து விட்டதாகவும் அதனால் முதல்வர் பதவி விலக வேண்டுமென்றும் பலர் கூறி வறின்றனர்.அதுமட்டுமின்றி அதிமுக பாஜக சார்பாக பல போராட்டங்களும் நடைபெற்றது.குறிப்பாக அதிமுக எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ கொண்டு வர வேண்டும் என பட்ஜெட் விவாதத்தில் தெரிவித்ததோடு ஆளுநரிடமும் மனு அளித்துள்ளார்.

மேற்கொண்டு தனது டீம் மூலம் தனிப்பட்ட முறையில் இந்த வழக்கு குறித்து நீதிமன்றத்தில் மனு கொடுத்து விசாரணையும் செய்து வருகிறார்.இவ்வாறு இருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் ஒரே மாதிரியான கண்டனத்தை திமுகவிற்கு எதிராக கூறி வருகிறது.இதனை தவிர்க்க முடியாமல் தான் தமிழக அரசு 10 லட்சம் இழப்பீட்டுத் தொகையை வழங்குவதாக உத்தரவிட்டுள்ளது.இதனிடையே திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பேசியதும் தற்பொழுது சர்ச்சையாகி வருகிறது. முதலாவதாக அவர் அண்ணாமலை குறித்து, அவர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிலைகுலைக்கும் வகையில் குற்றம் சாட்டினார்.அதாவது விக்கிரவாண்டி தேர்தலுக்காக அண்ணாமலை இந்த கள்ளச்சார விவகாரத்தை நடத்திருக்கலாம் என்று கூறினார்.

இதற்கு அண்ணாமலை மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியதோடு தனது பெயருக்கு கலங்கம் வகிக்கும் வகையில் பேசியதாக 1 கோடி நஷ்ட ஈடு மற்றும் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.ஆனால் ஆர் எஸ் பாரதி இதனை முற்றிலும் மறுத்து இதே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தங்கள் கட்சியை அவதூறாக சம்பந்தப்படுத்தி பேசி வருவதற்கு நீங்கள் 2 கோடி நஷ்ட ஈடு கொடுப்பதுடன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இவர்களின் இந்த நோட்டீஸ் போரானது தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.