சீனாவின் வுகானிலிருந்து மற்ற பகுதிகளுக்கு கொரோனா ஏன் பரவில்லை? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றசாட்டு! வலுக்கும் சந்தேகம்
சீனாவின் வுகானிலிருந்து மற்ற பகுதிகளுக்கு கொரோனா ஏன் பரவில்லை? என சீனாவின் மீது சந்தேகத்தை அதிகரிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றசாட்டு எழுப்பியுள்ளார்.
ஆரம்பத்தில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும்பாலான நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாகி வருகிறது. உலக பொருளாதாரத்தையே புரட்டி போட்ட இந்த கொரோனா வைரஸ் பரவல் குறித்து தினம் தினம் பல்வேறு கருத்துக்கள் பரவி வருகிறது.இதில் குறிப்பாக கொரோனா வைரஸ் உருவான விதம் குறித்தும், அதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் அந்த வைரசுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு உள்ளிட்ட தகவல்கள் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
அடுத்ததாக உலக அளவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு அதிகமாக பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் சீனாவின் மீது சுமத்தும் குற்றசாட்டும் அதற்கு சீனா அளிக்கும் பதிலும் உலக அளவில் தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது.இந்த விவகாரத்தில் இருநாடுகளுக்குமிடையே தொடர்ந்து மோதல் போக்கு அதிகரித்த வண்ணமேயுள்ளது.
இந்நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் சீனாவைச் சீண்டும் வகையில் கடுமையாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து நேற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலுள்ள ரோஸ் கார்டனில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய அதிபர் ட்ரம்ப்,“நாம் சீனாவுடன் பழகுவது நல்ல விஷயம் தான். ஆனால், இனி அது நடக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. இதுபற்றி நான், பின்னர் உங்களுக்கு தெரியபடுத்துகிறேன். நாம் மூன்று மாதங்களுக்கு முன்னரே சீனாவுடன் செய்த முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்து தற்போது நான் சற்று வித்தியாசமாகக் கருதுகிறேன்.
கோவிட் -19 என்பது சீனாவிலிருந்து இந்த உலகத்துக்கே கிடைத்த பரிசு. ஆனால் இது நிச்சயம் நல்ல பரிசு அல்ல. சீனாவானது ஆரம்பத்திலேயே வைரஸை பரவாமல் தடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யாமல் நமக்கு மிக மோசமான பரிசைக் கொடுத்துவிட்டனர். சீனாவின் வுஹான் பகுதியானது அதிக மக்கள்தொகை கொண்ட சிக்கலான நகரம். இந்நிலையில் அங்கு உருவான கொரோனா வைரஸ் எப்படி சீனாவின் மற்ற பகுதிகளுக்குப் பரவவில்லை? குறிப்பாக இந்த கேள்வி என்னுடையது மட்டுமல்ல மொத்த உலக நாடுகளின் கேள்வியும் இதுதான்.
அமெரிக்காவை சீனா நன்றாக பயன்படுத்திக் கொண்டது, குறிப்பாக சீனாவை மீண்டும் கட்டியெழுப்ப நாம் உதவினோம், இதற்காக சீனாவிற்கு ஆண்டுக்கு 500 பில்லியன் டாலர் கொடுத்தோம். சீனாவுடனும் பிற நாடுகளுடனும் நம் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் எவ்வளவு முட்டாள்தனமானவர்கள். ஆனால் அவ்வாறு செய்த அவையனைத்தும் தொடர்ந்து மாறிக்கொண்டே உள்ளது.
நாங்கள் இதற்காக வைரஸ் தடுப்பூசிகள் குறித்து ஒரு கூட்டத்தை நடத்தினோம். இதில் நம்ப முடியாத அளவுக்கு நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். சில சாதகமான ஆச்சரியமான தகவல்களை நாங்கள் வைத்துள்ளோம். மேலும் வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலில் ஏற்கனவே சீனாவின் மீது உலக நாடுகளுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இவ்வாறு சீனாவின் மீது குற்றம்சாட்டியுள்ளது அந்த சந்தேகத்தை மேலும் அதிகரிக்கவே செய்கிறது.