இனி இவை அனைத்திற்கும் ஒரே டிக்கெட் தான்!! வெளிவரப்போகும் தமிழக அரசின் மாஸ் திட்டம்!!
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியை சுற்றி மெட்ரோ ரயில் சேவை அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் நாம் மெட்ரோவில் பயணிக்க வேண்டும் என்றால் டிக்கெட் எடுத்து கொள்ளலாம் அல்லது ஸ்மார்ட் டிக்கெட்டை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். பயணம் செய்யும் இடத்திற்கு தகுந்தாற்போல் ஒரு மாதத்திற்க்கு தேவையான பணத்தை செலுத்தி இந்த ஸ்மார்ட் டிக்கெட் கார்டை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு மொபைல் செயலியும் உள்ளது.
மேலும் சென்னையை சுற்றி பயணிக்கும் வகையில் எலெக்ட்ரிக் ரயில் சேவை, பேருந்து சேவை, மெட்ரோ ரயில் சேவை போன்றவை உள்ளன. ஆனால் இவை மூன்றிற்கும் தனி தனியாக பயணசீட்டை பெற வேண்டும். இதனால் ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகம் இதற்கு ஒரு புதிய தீர்வை முடிவு செய்துள்ளது. மூன்று வகையான போக்குவரத்திற்கும் ஒரே ஸ்மார்ட் டிக்கெட் பயன்படுத்தும் முறையை செயல்படுத்த உள்ளது.
இதை பயன்படுத்தி மூன்று போக்குவரத்திற்கும் ஒரே ஸ்மார்ட் டிக்கெட்டை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். QR CODE-ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் பயணசீட்டை பெற்றுகொள்ளலாம். இது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மேலும் இந்த திட்டம் அடுத்த ஆண்டிற்குள் நடைமுறை படுத்த தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளபடுகிறது.