அது இல்லைனா இது.. துணை முதல்வராகப்போகும் உதயநிதி!! கங்கணம் கட்டி சுற்றும் ஸ்டாலின்!!
திமுக வாரிசு அரசியலை நடத்தி வருகிறதென்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆட்சிக்கு வருவதற்கு முன் தனது மகன் கட்டாயம் அரசியலுக்கு வர மாட்டார் என்ற சொன்னவர் தான் தற்பொழுது தனது மகனையே அமைச்சரவையில் உட்கார வைத்துள்ளார். இதனின் அடுத்த கட்டமாக துணை முதல்வர் பதவியில் அமர வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கட்டாயம் அமைச்சரவையில் மாற்றம் உண்டாகும் அச்சமயத்தில் துணை முதல்வர் பதவிக்கு உதயநிதி அமர்த்தப்படலாம் என்ற பல தரப்பும் கூறியது.
ஆனால் மக்களவைத் தேர்தல் முடிவடைந்தவுடன் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் திமுகவிற்கு பாதகமாக அமைந்துவிட்டது. இச்சமயத்தில் துணை முதல்வர் பதவியை மாற்றினால் திமுக மீது தொடர் சர்ச்சை எழுவதுடன் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திவிடும். இதனை கருத்தில் கொண்டு திமுக இதனை ஒத்திவைத்தது. தற்பொழுது விக்கிரவாண்டி தேர்தல் பை எலெக்ஷன் நடைபெற இருப்பதால் இதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி கொண்டாட்டத்துடன் துணை முதல்வர் பதவியில் கட்டாயம் உதயநிதியை உட்கார வைத்து விடலாம் என்று எண்ணுகின்றனர்.
இதன் காரணமாகத்தான் இந்த இடைத்தேர்தலில் திமுக பணத்தை வாரி இறைத்து வருகிறது. இந்த திட்டம் கைகொடுக்கவில்லை என்றாலும் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவ்வாறு அமெரிக்கா செல்லும் பட்சத்தில் இவரது நிர்வாக பணிகளை கவனிக்க உதயநிதியை துணை முதல்வர் பதவியில் அமர்த்தி விடலாம் என்றும் கூறுகின்றனர். இந்த இரண்டு திட்டத்தில் ஏதாவது ஒன்றை செயல்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் ஸ்டாலின் இருப்பதாக கோட்டை வட்டாரம் கூறி வருகிறது.
இதற்கு ஏற்றார் போல தான் விக்கிரவாண்டி தேர்தலின் முழு கவனிப்பை உதயநிதியிடமே ஸ்டாலின் விட்டு விட்டதாகவும் கூறுகின்றனர். இந்த காரணத்தினால் தான் விக்கிரவாண்டி தொகுதி பக்கம் கூட ஸ்டாலின் எட்டிப் பார்க்கவில்லை. கூடிய விரைவில் துணை முதல்வர் பதவிக்கு உதயநிதி அமர்த்தப்பட்டு வாரிசு அரசியல் பந்தம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.