மகளிர் உரிமைத்தொகை பெறுபவர்களுக்கு டபுள் டமாக்க ஆப்பர்.. கூடுதல் வட்டி!! உடனே விண்ணப்பியுங்கள்!!
தமிழக அரசால் குடும்ப பெண்கள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்ட திட்டம்தான் மகளிர் உரிமை தொகை திட்டம். இதன் மூலம் மாதம் ரூ.1000 அவர்களுடைய வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இதன் மூலம் ஏழை எளிய குடும்ப பெண்கள் பயன்பெற்றனர்.
மேலும் இதை இரட்டிப்பாக்கும் வகையில் தமிழக அரசு மலையரசி தொடர் வைய்ப்பு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இதன் மூலம் அரசு குறிப்பிட்டுள்ள வங்கிகளில் பணத்தை சேமிக்கும் போது அதன் வட்டி விகிதம் 7.5 சதவிகிதம் வரை அதிகரிக்குமாம். நாம் பொதுவாக வங்கிகளில் பணத்தை சேமிக்கும் போது 3-4 வரை மட்டுமே வட்டி விகிதம் கிடைக்கும். இது குறைவான விகிதம் ஆகும். மேலும் இத்திட்டதின் மூலம் 5 ஆண்டுகள் வரை பணம் சேர்க்க முடியும். இதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.
இத்திட்டம் நீலகிரியில் தொடங்கப்பட உள்ளதால் இதில் குடும்ப பெண்கள் யார் வேண்டுமானாலும் இணைந்துக் கொள்ளலாம். இதில் இணைபவர்களுக்கு மகளிர் உரிமை தொகை பணத்தின் மூலம் கூடுதல் வட்டியாக 7.5 சதவிகிதம் மலையரசி தொடர் வைப்புத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் இதை நீலகிரி கூட்டுறுவு வங்கி வழங்குகிறது.
தற்போது மகளிர் உரிமை தொகை பெற புதிதாக விண்ணப்பம் அளித்தவர்களுக்கு ஜூலை 15ம் தேதிக்குள் அவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்க ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அவர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடைவார்கள்.