வேலைவாய்ப்பு கிடைக்காத இளைஞர்களுக்கு அரசு வழக்கும் ரூ 1000!! இன்றே விண்ணப்பியுங்கள்!!

0
433
Govt case also Rs 1000 for unemployed youth!!Apply today!!
Govt case also Rs 1000 for unemployed youth!!Apply today!!

 

வேலைவாய்ப்பு கிடைக்காத இளைஞர்களுக்கு அரசு வழக்கும் ரூ 1000!! இன்றே விண்ணப்பியுங்கள்!!

தமிழகத்தில் பல இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி இருக்கின்றனர். அவர்கள் வேலை வாய்ப்புக்காக அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அதில் பள்ளி படிக்கும் மாணவர்களிலிருந்து கல்லூரி மாணவர்கள் வரை அடங்குவர். பள்ளியில் 10,12 வகுப்பு முடித்த மாணவர்கள் பதிவு செய்யலாம். கல்லூரியில் பயிலும் மாணவர்கள் டிகிரி முடித்திருந்தால் பதிவு செய்யலாம்.

தற்பொழுது அரசு வேலை என்பது அனைத்து இளைஞர்களின் கனவு ஆகும். இதற்காக சில பேர் தன்னை தயார் படுத்திக்கொண்டு பல நாட்கள் காத்திருகின்றனர்.
மேலும் அவர்கள் பதிவு செய்த நாட்களிலிருந்து அவர்களின் பதிவு எண் அடிப்படையில் அவர்களுக்கான நேர்முகத்தேர்வு நடைபெறும்.

இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அவர்கள் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழக அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

ஒருவர் பதிவு செய்து நீண்ட நாட்கள் ஆகின்றன. அவருக்கு 5 ஆண்டுகள் நிறைவு பெற்று வேலைவாய்ப்பு இல்லாத பட்சத்தில் அவருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாதவர்களும் அடங்குவர். அதற்கு சில வரையறை உள்ளன. முதலில் அவர் அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கவேண்டும். அப்படி பதிவு செய்திருந்தால் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200ம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300ம் வழங்கப்படும்.

மேலும் பன்னிரண்டாம் வகிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ400ம் பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.600ம் வழங்கப்படும். மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்றாலே போதும். அவர்கள் ஊக்கதொகைக்கு பெறுவதற்கு தகுதியானவர்கள்.

இதன் மூலம் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் பயனடைவார்கள் அவர்களின் சுமை குறையும். மேலும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வேலூர் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இதில் தேவைப்படும் ஆவணங்கள் குடும்ப அட்டை மற்றும் வேலைவாப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவு என் அட்டை மற்றும் கல்வி சான்றுகள் போன்றவை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் இந்த தொகை மாதந்தோறும் வராது பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற பிறகு 3 மாதங்களுக்கு ஒரு முறை வங்கியில் செலுத்தப்படும்.