மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு.. சமையல் எரிவாயு சிலிண்டர் பெருவதற்க்கு இனி ஆதார் அவசியம்!!
நாம் அன்றாடம் வீட்டிற்க்கு பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மாதம் 1சிலிண்டர் வீதம் வருடத்திற்க்கு 12 சிலிண்டர்களை நிரப்பிக்கொள்ளலாம். இது மத்திய அரசால் கொடுக்கப்படும் அளவு ஆகும். நமக்கு ஒரு சிலிண்டர் முடிந்த பிறகு மற்றொன்றை நிரப்ப வேண்டுமென்றால் நாம் பதிவு செய்த மொபைல் நம்பரிலிருந்து அழைத்து பதிவு செய்தால் போதும். சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்களே நம் இடத்திற்கு வந்து கொடுத்துவிட்டு செல்வார்கள்.
அப்படி இருக்கையில் சில குடும்பங்கள் கொடுக்கப்பட்ட அளவை விட குறைவான அளவே சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் அதை பயன்படுத்தி கடைகளில் மற்றும் பெரிய பெரிய உணவு விடுதிகளில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை உபயோகிக்கின்றனர். கடைகள் மற்றும் உணவு விடுதிகளில் பயன்படுத்துவதற்கென்று பிரத்தியேக சிலிண்டர்கள் உள்ளன அதைத்தான் உபயோகிக்க வேண்டும்.
இதை தடுக்கும் விதமாக மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இதைப்பற்றி மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி கூறுகையில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பெறுபவர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை கட்டாயமாக இணைத்திருக்க வேண்டுமென்றும் மேலும் பதிவு செய்த மொபைல் நம்பரை சரிபார்துக்கொள்ள வேண்டுமென்றும் கூறினார். இதன் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை உணவு விடுதிகள் மற்றும் கடைகளில் பயன்படுத்துவதை தடுக்க முடியுமென்று அவர் கூறினார்.
இந்நிலையில் கேரளா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் திரு. சதீசன் அவர்கள் இதை குறித்து பல குற்றச்சாட்டுகளை மத்திய அரசிடம் முன்வைத்தார். ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென்றால் அதற்கு பல இன்னல்கள் உள்ளன வயதானவர்களுக்கு அதை எப்படி இணைக்க வேண்டுமென்று தெரியாதென்றும் குடும்ப பெண்களுக்கு இதை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லையென்றும் அதில் கூறினார். மேலும் இதை குறித்து அவர் பெட்ரோலிய துறை அமைச்சருக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
இதற்கு ஹர்திப் சிங் பூரி அவர்கள் கடந்த 8 மாதங்களாக ஆதார் எண்ணை e-KYC மூலம் இணைக்கும் பணி நடை பெற்றுக் கொண்டிருப்பதாகவும். மேலும் அதை இணைக்கும் பணியை சிலிண்டர் விநியோகிக்கும் நபரே நேரடியாக சரி பார்த்து இணைத்துக் கொள்வதாகவும் சதீசன் அவர்களுக்கு தனது X வலைத்தளத்தில் பதிலளித்துள்ளார். மேலும் ஆதார் எண்ணை இணைப்பதற்கு குறிப்பிட்ட கால வரையறை ஏதும் கொடுக்கவில்லையென்றும் எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாமென்றும் அவர் கூறினார். இதனால் அவர்களுக்கு எந்த சிரமமும் இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.