பெண் குழந்தைகளுக்கு ரூ.27,00,000 லட்சம் கொடுக்கும் மத்திய அரசின் அட்டகாசமான திட்டம்!! விண்ணப்பம் செய்வது எப்படி?
நம் இந்தியாவில் மக்களிடையே முதலீடு செய்வது குறித்த ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.எதிர்கால வாழக்கைக்கு எது சிறந்த திட்டமாக இருக்கும் என்பது குறித்து ஆராய்ந்து முதலீடு செய்து வருகின்றனர்.குறிப்பாக தபால் நிலைய திட்டங்களில் முதலீடு செய்வது குறித்த ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வருகிறது.
மத்திய அரசு செயல்படுத்தி வரும் இந்த தபால் அலுவலக திட்டங்கள் வாயிலாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயனடைந்து வருகின்றனர்.தபால் திட்டங்களின் சிறப்பே
முதலீட்டிற்கான உத்திரவாதம்,அதிக வட்டி,வரிச் சலுகைகள் தான்.இந்த தபால் திட்டங்களில் அதிக வட்டி கிடைக்கும் திட்டமாக செல்வமகள் சேமிப்பு திட்டம் (சுகன்யா சம்ரிதி யோஜனா) உள்ளது.
பெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.பிரதமர் மோடி அவர்களால் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த தொடங்கி வைக்கப்பட்டது.தற்பொழுது இந்த திட்டத்திற்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.1,50,000 வரை முதலீடு செய்ய முடியும்.இந்த திட்டத்தில் 80c க்கு கீழ் வருமான வரிச் சலுகை வழங்கப்படுகிறது.10 வயதிற்கு குறைவான பெண் குழந்தைகள் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் இணைந்து இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய தேவைப்படும் ஆவணங்கள்:
1)ஆதார் கார்டு
2)பான் கார்டு
3)குழந்தையின் வயது சான்று
4)பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
ஆண்டு முதலீட்டு தொகை: ரூ.60,000(மாதம் ரூ.5,000)
வட்டி விகிதம்: 8.2%
முதலீடு செய்யும் ஆண்டுகள்: 15
முதலீட்டு தொகை: ரூ.9,00,000
வட்டி தொகை: ரூ.18,92,000
முதிர்வு தொகை: ரூ.9,00,000(முதலீட்டு தொகை) + (ரூ.18,92,000(வட்டி தொகை) = ரூ.27,92,000