ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு செம குட் நியூஸ்.. நேரடியாக உங்கள் வங்கி கணக்கிற்கு வரும் ரூ.10,000!!
ஏழைகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் அமைப்புச்சாரா துறைகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் வருமாண வரி செலுத்தாத 60 வயதுக்கு மேற்ப்பட்டுள்ள முதியோர்கள் இவர்களின் நலன் கருதி மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா(APY).
இத்திட்டத்தின் கீழ் சந்தாதாரர்களாக இருப்பின் ஏழ்மையில் உள்ள 60 வயதிற்க்கு மேற்ப்பட்டவர்களுக்கு அவர்களுடைய கடைசி காலங்களில் பயன்படும் வகையில் APY திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஓய்வூதியமாக அவருடைய வங்கிக்கணக்கில் குறிப்பிட்ட தொகையை செலுத்துவார்கள். அது ரூ.1000 முதல் 5000 வரை அவர்களுடைய வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்நிலையில்தான் மத்திய அரசு அவர்களுக்கு ஒரு நற்ச்செய்தியை அறிவித்துள்ளது.
நடப்பு ஆண்டு மதிய அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட்டில் ஓய்வூதிய தொகையை ரூ.10,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும் புதிதாக விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மேலே குறிப்பிட்டவர்களில் ஒருவராக இருக்க வேண்டும் மேலும் 18 முதல் 40 வயதிற்க்குள் வரி செலுத்தாத சேமிப்புக்கணக்கு வைத்திருப்பின் அவர்கள் (APY) திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து சந்தாதாரர்கள் ஆகலாம்.
மேலும் சந்தாதாரர் மறைவிற்க்கு பிறகு அவருடைய துணைவி அவருடைய ஆயுட்காலம் முடியும் வரை ஓய்வூதிய தொகையை பெறுவதற்கு சம உரிமையுள்ளது. அல்லது இதே கணக்கில் தொடர விருப்பமிருந்தால் அவர் அதில் தொடரலாம் அல்லது இத்திட்டத்தை நிறுத்திவிட்டு மணைவி திட்டத்தின் பலன்களை கூட பெறலாம். இதன் மூலம் அவர்கள் மிகவும் பயனடைவார்கள்.