பதறும் பாஜகவினர்.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எதிர்பாராத ட்விஸ்ட்!! சசிகாந்த் செந்தில் ஆவேசம்!!
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பகுஜன் சமாஜ்வாத கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தமிழகத்தில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஏப்ரலில் ஆருத்ரா ஊழலில் பாதிக்கப்பட்ட மக்கள் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடினார்கள் இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆம்ஸ்ட்ராங் அவர்கள் உதவினார்.
இந்நிலையில் ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட ஆற்காடு சுரேஷ் கொலையானார் அதற்கு பழிவாங்கும் விதமாக ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார் என்ற தகவல் வெளியானது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் ஆருத்ரா மோசடி வழக்கிற்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதைப்பற்றி நிரூபர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேட்ட போது அவர் செல்வப்பெருந்தகையை கிருமினல் என விமர்சித்துள்ளார்.
அதற்கு திருவள்ளூர் எம்பியும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் அவர்கள் அளித்த பேட்டியில், திரு அண்ணாமலை அவர்கள் இதில் பதருவதற்கு ஒன்றுமில்லை எனவும் எங்கள் தலைவர் செல்வப்பெருந்தகை சரியான கேள்வியை எழுப்பினார் அதற்கு ஏன் பாஜக தலைவர் இப்படி பதற வேண்டும். அப்படியென்றால் ஆருத்ரா மோசடிக்கும் பாஜகவிற்கும் தொடர்பிருக்கிறது அதை பாஜகவினர் மறைக்க பார்கிறார்கள்.
இதைப் பற்றி எங்கள் தலைவர் செல்வப்பெருந்தகை கேட்ட கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லாததால்தான் அவரை அப்படி விமர்சனம் செய்துள்ளீர்கள் என குற்றச்சாட்டை முன் வைத்தார். நீங்கள் இந்த வழக்கை திசை மாற்ற பார்க்கிறீர்கள் கூடிய விரைவில் கொலை செய்யப்பட்டதன் உண்மையான காரணம் தெரியவரும் என கூறினார்.