பிஎம் கிசான் சம்மன் பயனாளிகளே.. இதை செய்யவில்லை என்றால் தவணை தொகை கிடைக்காது!!

0
225
BM Kisan Summon Beneficiaries.. If you don't do this then you won't get installment amount!!
BM Kisan Summon Beneficiaries.. If you don't do this then you won't get installment amount!!

பிஎம் கிசான் சம்மன் பயனாளிகளே.. இதை செய்யவில்லை என்றால் தவணை தொகை கிடைக்காது!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது.வருடத்தில் மூன்று தவணைகளில் இந்த தொகை வழங்கப்படுகிறது.கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கு இதுவரை 17 முறை தவணைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 9.3 கோடி சிறுகுறு விவசாயிகள் பயன்பெற்று வரும் நிலையில் KYC சமர்பிக்காத விவசாயிகளுக்கு 17வது தவணைத் தொகை செலுத்தப்படவில்லை.மேலும் நிலம் தொடர்பான ஆவணங்கள்,NPCI சமர்பிக்காத சுமார் 44,000 விவசாயிகள் கிசான் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கிசான் சம்மன் யோஜனா திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாயிகளின் கருவிழி பதிவு செய்யும் முறை தற்பொழுது அமல் படுத்தப்பட்டுள்ளது.பிஎம் கிசான் செயலி மூலம் இந்த கருவிழி பதிவு முறை செய்யப்படுகிறது.

ஒவ்வொரு வட்டாரத்தில் இருந்து 5% பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒரு பட்டியல் தயாரிக்கப்படும்.பிறகு பட்டியலில் உள்ள நபர்கள் வட்டார வேளாண் அலுவலகங்களுக்கு சென்று கருவிழிகளை பதிவு செய்ய வேண்டும்.தற்பொழுது வேளாண் அலுவலர்கள் கிசான் பயனாளிகளின் கருவிழி சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Previous articleமின்சாதனங்களை இப்படி யூஸ் பண்ணுங்க இனி கரண்ட் பில் பிரச்சனை இருக்காது – மின்சார வாரியம் அட்வைஸ்!!
Next articleஎவ்வளவு நேரம் AC ஓடினாலும் கரண்ட் பில் எகிறாமல் இருக்க.. இந்த அசத்தல் டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!