எவ்வளவு நேரம் AC ஓடினாலும் கரண்ட் பில் எகிறாமல் இருக்க.. இந்த அசத்தல் டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!
இன்று பலரது வீடுகளில் AC என்ற குளிர் மின்சாதனம் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளதால் அதை சமாளிக்க ஏர் கூலர்,ஏர் கண்டிஷனர் போன்ற குளிர் சாதனங்கள் வாங்குபரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
ஏர் கண்டிஷனர் வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொண்டாலும் அதனால் ஏற்படும் கரண்ட் பில் மண்டையை சூடாக்கும் அளவிற்கு இருக்கிறது.தற்பொழுது கோடை காலம் முடிந்து மெல்ல மெல்ல மழை காலத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம்.இந்நிலையில் கடந்த கோடை கால கரண்ட் பில் பெருமபாலானோருக்கு அதிர்ச்சி தரக் கூடிய ஒன்றாக இருந்திருக்கும்.
ஆனால் AC-யை கீழ் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி இயக்கச் செய்தால் கரண்ட் பில் வரவே வராது.
1)AC-யை சரியான வெப்பநிலையில் செட் செய்வது அவசியமாகும்.24 டிகிரி செல்சியஸில் செட் செய்தால் கரண்ட் பில் கட்டணத்தை குறைக்க உதவும்.
2)6 மாதங்களுக்கு ஒருமுறை AC-யை சர்வீஸ் செய்ய வேண்டும்.மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பில்டரை சுத்தம் செய்ய வேண்டும்.AC பில்டர்களில் அதிகப்படியான தூசுகள் இருந்தால் வீட்டு அறையை குளிர்விக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும்.இதனால் கரண்ட் பில் அதிகரித்துவிடும்.
3)AC ஆனில் இருக்கும் பொழுது வீட்டு ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும்.திறந்த நிலையில் இருக்கும் பொழுது ஏசி காற்று வீணாக வெளியேறி கரண்ட் பில் எகிறும்.
4)AC ஆன் செய்த உடன் FAN-ஐ ஆன் செய்யுங்கள்.இதனால் அறையில் விரைவில் குளிர்ச்சியான நிலை ஏற்படும்.இவ்வாறு அறை குளிர்ந்த பின்னர் FAN-ஐ ஆப் செய்து விடலாம்.
5)AC-இல் டைமர் செட் செய்வதால் உரிய நேரத்தில் அவை தானாக ஆப் ஆகி விடும்.இதனால் தேவையில்லாமல் அவை இயங்குவது தடுக்கப்பட்டு மின்சார கட்டத்தை குறைக்க முடியும்.